அமர் சித்திரக் கதை

இந்தியாவில் வரைகலைத் தொடர் நூல்களை வெளியிடும் நிறுவனம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

அமர் சித்ரா கதை (Amar Chitra Katha) என்பது வரைகலை புதினங்களையும், வரைகதைகளையும் வெளியிடும் இந்திய வெளியீட்டு நிறுவனம் ஆகும். இந்தியர்களால் பாசமாக 'பை மாமா' (Uncle Pai) என அழைக்கப்படும் அனந்து பை என்பவரால் 1967 ஆம் ஆண்டில் இந்நிறுவனம் நிறுவப்பட்டது. இவற்றில் பெரும்பாலானவை மத புனைவுகள், காப்பியங்கள், வரலாற்று புள்ளிவிவரங்கள், சுயசரிதைகள், நாட்டுப்புறக் கதைகள், கலாச்சாரக் கதைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை.

விரைவான உண்மைகள் நிலைமை, துவங்கியவர் ...
Remove ads

உருவாக்கமும் செல்வாக்கும்

இந்தியக் குழந்தைகளுக்கு அவர்களின் கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பற்றி கற்பிக்கும் முயற்சியாக படக்கதைத் தொடரை அனந்த் பை தொடங்கினார். கிரேக்கம், உரோமானியப் புராணக் கதைகள் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் இந்திய மாணவர்கள், தங்கள் சொந்த வரலாறு, புராணங்கள், நாட்டுப்புறக் கதைகளை அறியாமல் இருப்பது கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். 1967இல் தூர்தர்ஷன் தொலைக்காட்சி நடத்திய கேள்வி-பதில் நிகழ்ச்சியை ஆனந்த் பை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது கிரேக்க புராணங்களிலிருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்த குழந்தைகள், இந்திய இதிகாசமான இராமாயணத்திலிருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் திணறியதைக் கண்டார். இராமனின் தாயாரின் பெயரைச் சொல்ல முடியாத குழந்தையைக் கண்ட அவர், அப்போதே அதற்கான முயற்சிகளில் ஈடுபடத் துணிந்தார்.[1] பிரபல நிறுவனங்கள் அவரது முயற்சிக்கு ஆதரவு தெரிவிக்கத் தயங்கிய நிலையில், இந்தியா புக் ஹவுஸ் நிறுவனத்தின் ஜி.எல்.மிர்ச்சந்தனி என்பவர் ஆனந்த் பைக்கு உதவினார். பாரதத்தின் பாரம்பரியம், இலக்கியங்கள், பண்பாடு, தலைவர்கள் குறித்த சித்திரக் கதைகளை இந்நிறுவனம் வெளியிட்டது. குறுகிய காலத்திலேயே நிறுவனம் புகழ் பெற்றது. நிறுவனம் வளர்ந்தபோது, சித்திரக்கதை எழுத்தாளராகவும், ஆசிரியராகவும் வெளியீட்டாளராகவும் மாறினார்

அவுட்லுக் பத்திரிகை இந்த பிரபலமான படக்கதைத் தொடரின் தோற்றம் பற்றி வேறுக் கட்டுரையைக் கொண்டுள்ளது: அமர் சித்திரக் கதைக்கான யோசனையும் திட்டமும் பெங்களூரைச் சேர்ந்த ஜி.கே. அனந்த்ராம் என்ற ஒரு புத்தக விற்பனையாளரால் செய்யப்பட்டது. இது 1965 ஆம் ஆண்டில் கன்னடத்தில் முதல் அமர் சித்திரக் கதை தயாரிக்க வழிவகுத்தது. ஆனால் ஆங்கிலம் அல்ல. 1965இல் அனந்த்ராமின் முயற்சி ஒரு சிறந்த வணிக வெற்றியாக இருந்தது. இது மும்பையின் தலைமை அலுவலகத்தில் மிர்ச்சந்தனிக்கு அமர் சித்திரக் கதை என்பதை தொடஙகும் யோசனையை ஆங்கிலத்தில் விடாமுயற்சியுடன் பின்பற்ற வழிவகுத்தது.[2]

1970களின் பிற்பகுதியில், இது ஆண்டுக்கு 5 மில்லியன் பிரதிகள் விற்பனையானது. மேலும், ஒரு மாதத்திற்கு சுமார் 700,000 என்ற உச்சபட்ச விற்பனையைக் கொண்டிருந்தது. இந்தியா புக் ஹவுஸ் என்ற பதிப்பக நிறுவனம் 1975க்குள் ஒரு மாதத்திற்கு ஒரு சித்திரக் கதை புத்தகத்தையாவது கொண்டு வரத் தொடங்கியது. சில சமயங்களில் மூன்று வரை கூட வெளியிட்டது. ஆனந்த் பை ஆரம்பத்தில் முதல் சில கதைகளை தானே எழுதியிருந்தாலும், விரைவில் அவர் எழுத்தாளர்கள் மற்றும் ஆசிரியர்களைக் கொண்ட ஒரு முக்கிய குழுவை நியமித்தார். இதில் சுப்பா ராவ், லூயிஸ் பெர்னாண்டஸ், கமலா சந்திரகாந்த் ஆகியோர் அடங்குவர். அவர்கள் சித்திரக் கதை புத்தகங்களில் நம்பகத்தன்மையையும் வரலாற்றின் சீரான சித்தரிப்புக்கும் முயன்றனர். அமர் சித்ர கதையின் தனிச்சிறப்பு.[3] மார்கி சாஸ்திரி, தெப்ரானி மித்ரா மற்றும் சி.ஆர்.சர்மா போன்ற எழுத்தாளர்களும் இதன் படைப்புக் குழுவில் இணைந்தனர். அனந்த் பை பெரும்பாலான திரைக்கதைகளில் ஆசிரியராகவும், இணை எழுத்தாளராகவும் பொறுப்பேற்றார். முதல் இதழில் படங்களை வரைந்த இராம் வீர்கர், கிருஷ்ணா, திலீப் கௌதம், சி.எம். விட்டங்கர், சஞ்சீவ் வீர்க்கர், சவுரன் ராய், சி.டி.ரனே, அசோக் தோங்ரே, வி.பி. ஹால்பே, ஜெஃப்ரி ஃபோலர், பிரதாப் முல்லிக், யூசுப் லீன் என்ற யூசுப் பெங்களூர்வாலா போன்றோர் இதில் பணியாற்ரிய முக்கியமானவர்கள் ஆவர்.[4]

Remove ads

மேற்கோள்கள்

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads