அமலெந்து குகா

From Wikipedia, the free encyclopedia

Remove ads

அமலெந்து குகா (Amalendu Guha: 30 சனவரி 1924–7 மே 2015) வரலாற்றாசிரியர், கல்வியாளர், நூலாசிரியர் என அறியப்படுகிறார். அசாம், ஆங்கிலம், வங்காளம் ஆகிய மொழிகளில் நூல்கள் எழுதியவர். அசாம் மாநில குமுக, பொருளியல் அரசியல் நிலைகளையும் சிக்கல்களையும் ஆய்வு செய்துள்ளார்.

சுயசரிதை

அமலெந்து இம்பாலில் பிறந்தார். இவரது தந்தை ஜமினிசுந்தர் குகா ஒரு பள்ளி ஆசிரியர். கொல்கத்தா மாநிலக்கல்லூரியில் முதுகலைப் படிப்பு முடித்துவிட்டு தெசுப்பூரில் தர்ரங் கல்லூரியில் ஆசிரியராகப் பணி செய்தார். 1962 ஆம் ஆண்டில் சீனப் படையெடுப்பின் காரணமாக இவர் இந்தியப் பொதுவுடமைக் கட்சியில் தீவிரமாக இருந்ததால் கைது செய்யப்பட்டார்

தொழில்

புனேயில் உள்ள கோகலே அரசியல் பொருளியல் நிறுவனம், தில்லிப் பல்கலைக் கழகம், கொல்கத்தாவில் சமூக அறிவியல் மையம் ஆகிய கல்வி நிறுவனங்களில் கற்பிக்கும் பணியை ஆற்றினார்[1][2][3].

இவர்து விருப்பப்படி இவர் இறந்ததும் இவருடைய உடல் குவகாத்தி மருத்துவமனைக்குக் கொடையாக வழங்கப்பட்டது. இவருடைய கண்கள் குவகாத்தில் உள்ள சங்கர்தேவ் நேத்ராலயாவுக்கு வழங்கப்பட்டது.

மேற்கோள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads