அமித் மிஷ்ரா

இந்தியத் துடுப்பாட்ட வீரர் From Wikipedia, the free encyclopedia

அமித் மிஷ்ரா
Remove ads

அமித் மிஷ்ரா (Amit Mishra), பிறப்பு: நவம்பர் 23, 1980), இந்தியத் துடுப்பாட்ட அணியின் மேனாள் துடுப்பாட்டக்காரர். இவர் இந்திய அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டி மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். ரஞ்சிக் கோப்பை தொடர்களில் இவர் அரியானா மாநிலத் துடுப்பாட்ட அணிக்காக விளையாடி வருகிறார். இந்தியன் பிரீமியர் லீக் தொடர்களில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

விரைவான உண்மைகள் தனிப்பட்ட தகவல்கள், முழுப்பெயர் ...
Remove ads

இந்தியன் பிரீமியர் லீக்

ஏப்ரல் 17, 2013 இல் 6 ஆவது இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் இவர் ஹேட்ரிக் இலக்குகளைக் கைப்பற்றினார். இதற்குமுன்னதாக 2008 ஆம் ஆண்டில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி சார்பாக விளையாடிய இவர் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும்,2011 ஆம் ஆண்டிலும் இதே அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியிலும் இவர் ஹேட்ரிக் இலக்குகளைக் கைப்பற்றினார். இதன்மூலம் மூன்று முறைகள் ஹேட்ரிக் இலக்கினைக் கைப்பற்றியவர் எனும் சாதனை படைத்தார்.

இவர் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக 2015 இந்தியன் பிரீமியர் லீக், 2016 இந்தியன் பிரீமியர் லீக், 2017 இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் விளையாடினார். 2018 இந்தியன் பிரீமியர் லீக் போட்டித் தொடரிலும் இவரை இந்த அணி ஏலத்தில் எடுத்தது.[1]

Remove ads

சர்வதேசபோட்டிகள்

ஒருநாள் போட்டிகள்

2003 ஆம் ஆண்டில் நடைபெற்ற டிவிஎஸ் கோப்பைக்கான தொடரின் போது தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். 2009 இல் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 2009 ஐசிசி உலக இருபது20  கோப்பைத் தொடரிலும் இவர் இந்திய அணிக்காக விளையாடினார்.

பின் வங்காளதேசத் துடுப்பாட்ட அணி, இலங்கைத் துடுப்பாட்ட அணி மற்றும் இந்தியத் துடுப்பாட்ட அணி ஆகிய மூன்று நாடுகள் பங்கேற்ற தொடரில் ஹர்பஜன் சிங்கிற்கு ஓய்வு அளிக்கப்பட்டதால் இவருக்கு விளையாடும் அணியில் வாய்ப்பு கிடைத்தது. பின் சூலை 28, 2013 ஆம் ஆண்டில் சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான  ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத் தொடரில் 10 ஓவர்கள் வீசி 47 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 4 இலக்குகளைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியின் ஆட்டநாயகன் விருதினைப் பெற்றார். இந்தத் தொடரில் அதிக இலக்குகள் வீழ்த்திய பந்துவீச்சாளர்களின் பட்டியலில் இவர் முதல் இடம் பிடித்தார். இருநாடுகளுக்கு இடையிலான ஒருநாள் பன்னாட்டுத் தொடர் போட்டிகளில் அதிக இலக்குகள் வீழ்த்திய ஜவகல் ஸ்ரீநாத்தின் சாதனையை சமன் செய்தார்.

2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆசிய கோப்பையின் போது பெப்ரவரி 2 இல் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில்  10 ஓவர்கள் வீசி 28 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 2 இலக்குகளைக் கைப்பற்றினார். இதன்மூலம் ஆசியக் கோப்பை பந்துவீச்சில் 6 ஆவது சிக்கனமானப் பந்துவீசியவர் எனும் சாதனையைப் படைத்தார்.[2]

2016 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் இவர் இடம்பெற்றார். இந்த அனிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டியில் 24 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 3 இலக்குகளைக் கைப்பற்றினார். பின் 2016-2017 ஆம் ஆண்டுகளில் நியூசிலாந்து துடுப்பாட்ட அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார்.இந்தத் தொடரின் முடிவில் 5 போட்டிகளில் இவர் 15 இலக்குகளைக் கைப்பற்றினார். இதில் நியூசிலாந்து அணியுடனான இறுதிப்போட்டியில் 18 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 5 இலக்குகளைக் கைப்பற்றி தொடரை இந்திய அணி 3-2 எனும் கணக்கில் வெற்றிபெற உதவினார்.[3]

Remove ads

சிறந்த பந்துவீச்சு

மேலதிகத் தகவல்கள் #, எண்ணிக்கை ...

சான்றுகள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads