அமெரிசியம்
அணு எண் 95 கொண்ட அதிக நச்சுத் தன்மையுள்ள கதிரியக்கத் தனிமம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
அமெரிசியம் (Americium) என்பது Am என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கதிரியக்க யுரேனியப் பின் தனிமமாகும். இதனுடைய அணு எண் 95. ஆக்டினைடு வரிசைச் சேர்மமான இது தனிம வரிசை அட்டவணையில் லாந்தனைடு வரிசைத் தனிமம் யூரோப்பியத்திற்கு கீழே வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காக்கள்[1] என்றழைக்கப்பட்ட பகுதியில் முதன்முதலில் கிடைத்ததால் ஒப்புமை கருதி இதற்கு அமெரிசியம் எனப் பெயரிடப்பட்டது.
மன்காட்டன் திட்டத்தின் ஒரு பகுதியாக சிக்காகோ பல்கலைக்கழகம்|சிக்காகோ பல்கலைக்கழகத்தின்]] உலோகவியல் ஆய்வகத்தில், கலிபோர்னியாவின் பெர்க்லி பகுதியைச் சேர்ந்த கிளென் தி.சீபோர்கு குழுவினர் முதன்முதலில் 1944 ஆம் ஆண்டு கதிரியக்கம் கொண்ட அமெரிசியத்தைக் கண்டறிந்தனர்..[2] யுரேனியப் பின் தனிமங்களின் வரிசையில் இது மூன்றாவது உறுப்பினராக இருந்த போதிலும் இது கியூரியம் கண்டறியப்பட்ட பிறகே நான்காவதாகக் கண்டறியப்பட்டது. இக்கண்டுபிடிப்பு பொது மக்களின் பார்வைக்கு இரகசியமாக வைக்கப்பட்டு 1945 ஆம் ஆண்டில்தான் வெளியிடப்பட்டது. புளூட்டோனியத்தை அணுக்கரு உலையில் நியூட்ரான்களால் மோதச் செய்து அமெரிசியம் தயாரிக்கப்படுகிறது. பயன்படுத்தப்படும் ஒரு டன் அணுக்கரு எரிபொருளில் 100 கிராம் அமெரிசியம் இடம் பெற்றுள்ளது. அயனியாக்க அறை புகை உணரியாக வர்த்தக முறையில் பரவலாக அமெரிசியம் பயன்படுத்தப்படுகிறது. மேலும், இதுவொரு நியூட்ரான் மூலமாகவும் தொழிற்சாலை அளவீடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. அணுக்கரு மின்கலன்களிலும் வான் கப்பல்களில் உந்து எரிபொருளாகவும்யன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.
அமெரிசியம் வெள்ளி உலோகம் போன்ற நிறத்தோற்றம் கொண்ட ஒரு மென்மையான கதிரியக்க உலோகமாகும். 241Am மற்றும் 243Am என்ற இரண்டு ஐசோடோப்புகளை அமெரிசியம் பெற்றுள்ளது. கரைசல்களில் இது +3 ஆக்சிசனேற்ற நிலையை ஏற்கிறது. இதைத் தவிர +2 முதல் +8 வரையிலான ஆக்சிசனேற்ற நிலைகளையும் இது ஏற்பதாக அறியப்பட்டுள்ளது
Remove ads
வரலாறு

வரலாறு
முன்னதாக அணுக்கரு சோதனைகளின் போது அமெரிசியம் உருவாகிறது என்பது அறியப்பட்டாலும், தேவைக்காக தொகுப்பு முறையில் தயாரிக்கப்பட்டு தனிப்படுத்தப்பட்டது 1944 ஆம் ஆண்டில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கிளென் தி.சீபோர்க்கு குழுவினர் இதைத் தயாரித்தனர். 60 அங்குல சுழற்சியலைவியை இதற்காக இவர்கள் பயன்படுத்தினார்கள்.[3]
மேற்கோள்கள்
புற இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads