அமெரிக்காக்கள்
கண்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
அமெரிக்காக்கள் (Americas) அல்லது அமெரிக்கா[1][2] எனப்படுபவை மேற்கு அரைப்பகுதி அல்லது புதிய உலகம் ஆகியவற்றில் உள்ள நிலப்பகுதிகள் ஆகும். இவற்றில் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களும் மற்றும் அவற்றைச் சூழவுள்ள தீவுகள் மற்றும் நிலப்பகுதிகள் உள்ளடங்கியுள்ளன. அமெரிக்கா என்ற சொல் ஒரு பொதுவான சொல்லாக இருந்தாலும், ஐக்கிய அமெரிக்காவையே பொதுவாகக் குறிப்பிடுவர்[3]. உலகின் மொத்த பரப்பளவில் 8.3% (28.4% நிலப்பரப்பையும்) அமெரிக்காக்கள் கொண்டுள்ளன. உலக மக்கள் தொகையில் இங்கு ஏறத்தாழ 13.5% மக்கள் இங்கு வசிக்கின்றனர்.

Remove ads
வரலாறு
கோண்டுவானா என்ற பெருங்கண்டத்தின் மேற்குப் பகுதியில் இருந்து தென்னமெரிக்கா ஏறத்தாழ 135 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்து தனியே ஒரு கண்டமானது[4]. 15 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் கரிபியன் தட்டு, பசிபிக் தட்டு ஆகியவற்றின் மோதலினால் பல எரிமலைகள் எல்லைகளிலே வெளிக்கிளம்பி பல தீவுகளை உருவாக்கின. நடு அமெரிக்காவின் தீவுக்கூட்டங்களின் இடைப்பட்ட பகுதிகள் தொடர் எரிமலை வெடிப்புகளினால் கிளம்பிய பொருட்களால் நிரம்பி புதிய நிலப்பகுதியை உருவாக்கின. 3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வரை வட அமெரிக்கா, மற்றும் தென்னமெரிக்கா கண்டங்கள் பனாமா பூசந்தியினால் (Isthmus of Panama) இணைக்கப்பட்டு, அதன்மூலம் அமெரிக்காக்கள் என்ற தனி நிலப்பகுதி உருவானது[5].
![]() |
![]() |
![]() |
![]() |
![]() | ||||||||||||||||||||||||||||||||||||||||
![]() |
![]() |
![]() |
![]() |
![]() | ||||||||||||||||||||||||||||||||||||||||
![]() |
![]() |
![]() |
![]() | |||||||||||||||||||||||||||||||||||||||||
![]() |
![]() | |||||||||||||||||||||||||||||||||||||||||||
![]() |
![]() | |||||||||||||||||||||||||||||||||||||||||||
30 degrees, 1800x1800 |
Remove ads
அடிக்குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads