அமேசோனாசு (பிரேசில் மாநிலம்)

From Wikipedia, the free encyclopedia

அமேசோனாசு (பிரேசில் மாநிலம்)
Remove ads

அமேசோனாசு (Amazonas, போர்ச்சுகீசிய உச்சரிப்பு : [ɐmɐˈzõnɐs]) பிரேசிலின் 26 மாநிலங்களில் ஒன்றாகும். இது நாட்டின் வடமேற்கு மூலையில் அமைந்துள்ளது. இது பரப்பளவில் பிரேசிலின் மற்ற மாநிலங்களை விட மிகப் பெரிய மாநிலமாக விளங்குகிறது. பரப்பளவின் அடிப்படையில் உலகளவிலும் நாட்டுப்பிரிவுகளினிடையே இது 9வது மிகப் பெரும் நாட்டு நிர்வாகப் பிரிப்பாக உள்ளது.

விரைவான உண்மைகள் அமேசோனாசு மாநிலம் எசுடேடோ டொ அமேசோனாசு, நாடு ...

இதனைச் சூழ்ந்துள்ள மாநிலங்கள்: (வடக்கிலிருந்து வலஞ்சுழியாக) ரோரைமா, பாரா, மடோ குரோசோ, ரோன்டோனியா, ஆக்ரி. மேலும் பெரு, கொலொம்பியா மற்றும் வெனிசுவேலா நாடுகளுடன் தன் எல்லையைக் கொண்டுள்ளது.

அமேசான் ஆற்றை ஒட்டி இதற்கு அமேசோனாசு என்ற பெயர் வந்தது. முன்னதாக எசுப்பானிய கயானா என அழைக்கப்பட்டப் பகுதியின் அங்கமாக பெருவின் எசுப்பானிய அரசப் பிரதிநிதி ஆட்சியில் இருந்தது. 18வது நூற்றாண்டின் துவக்கத்தில் இங்கு குடியேறிய போர்த்துக்கேயர்கள் 1750இல் ஏற்பட்ட மாட்ரிட் உடன்பாட்டின்படி தங்கள் பேரரசில் இணைத்துக்கொண்டனர். 1889இல் பிரேசிலியக் குடியரசின் மாநிலமானது.

இந்த மாநிலத்தின் பெரும்பகுதி வெப்பமண்டலக் காடுகளாலானது; ஆற்றோரங்களில் நகரக் குடியிருப்புகள் ஏற்பட்டன. எனவே இந்த நகரங்களை படகுகள் மூலமாகவோ வானூர்திகள் மூலமாகவோத்தான் சென்றடைய முடியும். தலைநகரமாகவும் பெரிய நகரமாகவும் உள்ள மனௌசு, 1.7 மில்லியன் மக்கள் வாழும் நவீன நகரமாகும்.இந்நகர் அத்திலாந்திக்குப் பெருங்கடலிலிருந்து அமேசான் ஆற்றுவழியே 1500 கி.மீ. தொலைவிலுள்ள காட்டின் நடுவே உள்ளது.இந்த மாநிலத்தின் மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவரக்ள் இந்நகரில் வசிக்கின்றனர். மற்ற பெரிய நகரங்களான, பரின்டின்சு, மனாகபுரு, இட்டாகோவாடியாரா, டெஃபெ, கோயரி ஆகியனவும் அமேசான் ஆற்றுத்தீரத்திலேயே மாநிலத்தின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளன.

Remove ads

மேற்சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads