ஐ. எசு. ஓ.3166-2

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஐ. எசு. ஓ.3166-2என்பது ஐ.எசு.ஓ 3166இன் ஓர் அங்கமாகும். ஐ. எசு. ஓ. 3166-1 இல் குறியிடப்பட்டுள்ள உலகின் அனைத்து நாடுகளின் பிரதான உட்கோட்டங்களை (மாநிலங்கள்,ஆட்சிப்பகுதிகள்) அடையாளப் படுத்த பயன்படுத்தப்படும் சுருக்கக் குறிகளை பட்டியலிடும் சர்வதேச சீர்தர மொழிக் குறியீடுகளின் தொகுதியாகும். இதன் அலுவல்முறையான தலைப்பு:நாடுகளின் மற்றும் அவற்றின் உட்கோட்டங்களின் பெயர்களை அடையாளப்படுத்தும் சுருக்கக் குறிகள்;பகுதி 2:நாட்டு உட்கோட்டங்கள் குறிகள்.இவை 1998ஆம் ஆண்டு முதலில் வெளியிடப்பட்டன.

ஐ.எசு.ஓ 3166-2 வின் நோக்கம் அனைத்து நாடுகளின் நிர்வாக கோட்டங்களையும் சுருக்கமான மற்றும் தனித்துவமான எண்ணெழுத்துகளால் உலக சீர்தரமாக குறிக்கப்பட்டு முழு பெயரையும் பல குழப்பங்களுடன் குறிப்பதை தவிர்ப்பதே யாகும். ஒவ்வொரு ஐ.எசு.ஓ 3166-2 குறியும் கிடைக்கோடு பிரிக்க இரு பகுதிகளைக் கொண்டுள்ளன:

  • முதல் பகுதி நாட்டின் ஐ. எசு. ஓ 3166-1 ஆல்பா-2 குறி
  • இரண்டாம் பகுதி மூன்று எண்ணிக்கைக்குள் உள்ள எண் அல்லது எழுத்து கொண்ட குறித்தொடர்;இவை அந்நாட்டில் ஏற்கனவே பின்பற்றப்படும் குறியீடாக இருக்கலாம்,அல்லது அந்நாடு கொடுத்த தரவுகளாக இருக்கலாம் அல்லது ஐ.எசு.ஓ 3166 பராமரிப்பு குழுமம் வடிவமைத்தவையாக இருக்கலாம்.

இவ்வகையான முழுமையான ஐ.எசு.ஓ 3166-2 குறி ஒவ்வொன்றும் உலகின் எந்தவொரு நிலப்பகுதியையும் குழப்பம் எதுவும் இன்றி துல்லியமாக டையாளப்படுத்தும்.தற்போது 4200 குறிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.[1]

சில நாடுகளுக்கு, இரு நிலைகள் அல்லது மேலும் குறிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. பொதுவாக உயர்நிலை உட்கோட்டங்களுக்கு ஐ.எசு.ஓ.3166-1 ஆல்பா-2 குறிகள் இன்றி வரையறுக்கப்பட்டுள்ளன. இதனால் தனியாக அவற்றினால் உலக அளவில் தனித்துவத்தை உறுதி செய்யவியலாது. இருப்பினும் ஆல்பா - 2 குறிகளுடன் அவை முழுமை பெறுகின்றன.[2]

Remove ads

நடப்பு குறிகள்

நாடுகள் வாரியாக ஒவ்வொரு நாட்டின் முழுமையான ஐ.எசு.ஓ 3166-2 குறிகள் பட்டியலுக்கு, பார்க்க ISO 3166-1.

வடிவம்

ஒவ்வொரு நாட்டின் ஐ.எசு.ஓ 3166-2 குறியீட்டின் வடிவமும் வெவ்வேறானது.அவை எழுத்துக்கள் மட்டும் கொண்டிருக்கலாம், எண்கள் மட்டும் கொண்டிருக்கலாம் அல்லது இரண்டும் கலந்தும் கொண்டிருக்கலாம்;தவிர அவற்றின் நீளமும் ஒரே அளவினதாக இருக்கலாம் அல்லது மாறும் நீளம் கொண்டதாக இருக்கலாம்.கீழே காணும் பட்டியலில் ஒவ்வொரு நாட்டின் ஐ.எசு.ஓ 3166-2 குறியீடுகளும் அவற்றின் வடிவத்தின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளன.(வரையறுக்கப்படாத நாடுகள் விடப்பட்டுள்ளன):

மேலதிகத் தகவல்கள் வரியுருக்களின் எண்ணிக்கை(இரண்டாம் பகுதி), எழுத்துக்கள் மட்டும் ...

குறிப்பு: இங்கு குறிப்பிட்டுள்ள குறிகள் அந்த நாட்டின் அடிமட்ட ஆட்சிப்பகுதிக்கானது,அதாவது,சீர்தரத்தின் ஐ.எசு.ஓ 3166-1 ஆல்பா-2 குறிகள் முன்னொட்டு கொண்டவை ஆகும்.

Remove ads

ஐ.எசு.ஓ 3166-1இல் சேர்க்கப்பட்டுள்ள உட்கோட்டங்கள்

கீழ்வரும் நாடுகளுக்கு, ஐ.எசு.ஓ 3166-2வில் காணும் உட்கோட்டங்களுக்கு, ஐ.எசு.ஒ 3166-1 கீழ் தனிநாட்டிற்கான குறிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. (பெரும்பாலானவை சார்பு மண்டலம்|சார்பு நிலப்பகுதிகளாக அந்நாடுகளில் உள்ளன).

மேலதிகத் தகவல்கள் ஆல்பா-2, நாட்டின் பெயர் ...
குறிப்பு
  1. தைவான் சீன மக்கள் குடியரசின் கீழுள்ள பகுதியாக இல்லாதிருப்பினும், ஐக்கிய நாடுகள் அதனை சீனாவின் பகுதியாகக் கருதுவதால்,தைவான் சீனாவின் உட்கோட்டமாக சேர்க்கப்பட்டுள்ளது. ஐ.எசு.ஒ 3166-1இல் தைவான் ஐ.நாவின் அரசியல் நிலைப்படி சீனாவின் மாநிலமாக பட்டியலிடப்பட்டுள்ளது.
  2. Svalbard மற்றும் Jan Mayen இரண்டிற்கும் கூட்டாக ஐ.எசு.ஓ 3166-1இல் நாட்டுக் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

பதிப்புகளும் திருத்தங்களும்

ஐ.எசு.ஓ 3166-2 இரு பதிப்புகளைக் கண்டுள்ளது. முதலாவது பதிப்பு (ஐ.எசு.ஓ 3166-2:1998) திசம்பர் 12,1998 அன்றும் இரண்டாம் பதிப்பு(ISO 3166-2:2007)திசம்பர் 13,2007 அன்றும் வெளியிடப்பட்டன.

இரு பதிப்புகளிடையே ஐ.எசு.ஓ 3166/பராமரிப்பு பேராணையம் திருத்தங்களை செய்திமடல்கள் மூலம் குறியீட்டுப்பட்டியலை இற்றைப்படுத்துகிறது.[3] பெரும்பாலானவை பெயரின் எழுத்துக்கோர்வை திருத்தங்கள், உட்கோட்டங்களின் சேர்க்கையும் விலக்கலும்,நிர்வாக அமைப்பில் மாறுதல்கள் என்பனவாகும்.

மேலதிகத் தகவல்கள் செய்திமடல், பதிப்பித்த நாள் ...
Remove ads

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads