அம்புஜம் கிருஷ்ணா
கருநாடக இசைப் பாடலாசிரியர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
அம்புஜம் கிருஷ்ணா (1917 - 1989) ஒரு கருநாடக இசைப் பாடலாசிரியர் ஆவார். அவர் பல்வேறு ராகங்களில் 600 க்கு மேற்பட்ட கிருதிகளை இயற்றியுள்ளார்.[1]
சொந்த வாழ்க்கை
மதுரையில் வழக்கறிஞராக பணியாற்றிய கே. வி. ரங்கா ஐயங்கார் என்பவருக்கு மகளாகப் பிறந்தார். காரைக்குடி கணேசன், கணேச பாகவதர் ஆகியோரிடம் இசை பயின்றார். தொழிலதிபரும் டி. வி. எஸ். குழுமத்தின் நிறுவனர் டி. வி. சுந்தரம் ஐயங்காரின் மகனுமான டி. எஸ். கிருஷ்ணா என்பவரைத் திருமணம் செய்தார்.[2] டெல்லி பல்கலைக்கழகத்தில் மனையியல் துறையில் பட்டம் பெற்றார்..[1] தொழிலதிபர் சுரேஷ் கிருஷ்ணா இவரது மகனாவார்.[3]
இசைப் பயணம்
அம்புஜம் கிருஷ்ணா தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம் உட்பட பல மொழிகளில் பாடல்கள் இயற்றியுள்ளார். மணிப்பிரவாள நடை என்று கூறப்படும் ஒரு பாடலில் பல மொழிகளைக் கையாளும் திறனையும் அவர் பெற்றிருந்தார். இவரது பாடல்கள் கீதமாலா என்ற தலைப்பில் இரண்டு தொகுதி நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன.
இவரது பாடல்களுக்கு டி. என். சேஷகோபாலன், வி. வி. சடகோபன், எஸ். இராமநாதன், செம்மங்குடி சீனிவாச ஐயர் போன்ற கருநாடக இசை வித்துவான்கள் இசை அமைத்துள்ளனர்.[1]
மதுரை ஸ்ரீ ஸத்குரு சங்கீத சமாஜம் என்ற அமைப்பின் மூத்த அமைப்பாளராக பணியாற்றியுள்ளார். அந்த அமைப்பின் ஒரு கிளையாக ஸத்குரு சங்கீத வித்தியாலயம் என்ற இசைப் பள்ளியையும் ஆரம்பித்தார்.[3]
Remove ads
இயற்றிய சில கிருதிகள்
கிருதி - இராகம்
- ஆடின அரவிந்தா - ராகமாலிகை
- ஆடினையே கண்ணா - மோகன கல்யாணி
- ஆண்டாள் கல்யாணம் (மின்னல் கொடியோ) - ராகமாலிகை
- அபய கரம் - சகானா
- அடைக்கலம் அடைக்கலம் - மத்யமாவதி
- ஆடி வரும் அழகினை - ராகமாலிகை
- ஆடிய பாதா - சரசாங்கி
- அற்புதம் அநேகம் - நாட்டைக்குறிஞ்சி
- அழகா அழகா - சுத்த தன்யாசி
- சின்ன சின்ன பாதம் - காபி
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads