அயர்லாந்து கால்பந்துச் சங்கம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அயர்லாந்து கால்பந்துச் சங்கம் (Irish Football Association, IFA), வடக்கு அயர்லாந்தின் சங்கக் கால்பந்து நிர்வாக அமைப்பாகும்; வழமையாக அயர்லாந்து தீவு முழுமைக்குமான கால்பந்து நிர்வாக அமைப்பு இதுவாகும். 1921 வரை (அல்லது 1950 வரை - எடுத்துக்கொள்ளப்படும் கால்பந்துப் போட்டியைப் பொறுத்து) அயர்லாந்து தேசிய காற்பந்து அணியை தேர்ந்தெடுத்து நிர்வகித்தது இச்சங்கமேயாகும்; அதன்பிறகு, வடக்கு அயர்லாந்து தேசிய காற்பந்து அணியை தேர்ந்தெடுத்து நிர்வகிக்கும் பொறுப்பு இதன் பணியாகவுள்ளது.
பன்னாட்டுக் கால்பந்துச் சங்க வாரியத்தின் உறுப்புச் சங்கமான அயர்லாந்து கால்பந்துச் சங்கம், ஃபிஃபா மற்றும் யூஈஎஃப்ஏ ஆகியவற்றின் உறுப்பினராகவும் உள்ளது.
இதனை, அயர்லாந்துக் குடியரசு கால்பந்துச் சங்கத்துடன் (Football Association of Ireland) குழப்பிக்கொள்ளக்கூடாது.
Remove ads
குறிப்புதவிகள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads