அய்யம்பாளையம் பெரியமுத்தாலம்மன் கோயில்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அய்யம்பாளையம் பெரியமுத்தாலம்மன் கோயில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம், திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகே உள்ள அய்யம்பாளையம் என்ற ஊரில் அமைந்துள்ள கிராமக் கோயிலாகும்.[1] திருக்கோவில் 1988ஆம் ஆண்டும் 2006 ஆம் ஆண்டும் குடமுழுக்கு செய்யப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் இறுதி வாரத்தில் இங்கு திருவிழா நடப்பது வழக்கமாகும்.[2]
வரலாறு
பட்டக்காரர் என்பவர் சுமார் 400 - 500 ஆண்டுகளுக்கு முன் தற்போதுள்ள பெரிய அய்யம்பாளையத்திற்கு முதலில் குடி வந்தார். இவர் பெரியமுத்தாலம்மன் கோயிலைக் கட்டி வணங்கி வந்தார். பின் பொது மக்கள் வணங்க, திருவிழா கொண்டாடப்பட்டது.
நாட்டுப்புறவியல் ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்களுக்கு ஆர்வமூட்டும்படியான அதிக தகவல்கள் இத்திருக்கோயிலின் வழிபாட்டு முறைகளில் உள்ளன. முதலில் பீடமும், அதற்குப்பின் மூலத்தானமும், அர்த்த மண்டபமும் பட்டக்காரரின் முன்னோர்கள் கட்டியதாகும். அதில் அவர்களின் சிலையும், பெயரும் கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. அடுத்துள்ள கோனார்கள் மண்டபம் கோனார்களால் கட்டப்பட்டது. அடுத்துள்ள பொது மண்டபம் எட்டுப்பட்டரையினரால் கட்டப்பட்டது. வஞ்சி மூப்பர் என்பவரை இக்கோவிலின் முதல் அர்ச்சகராக பட்டக்காரர் நியமித்தார். இந்தக் கோயிலின் திருவிழா ஆண்டிற்கு ஒரு முறை புரட்டாசி மாதம் கடைசி புதன், வியாழன் மற்றும் வெள்ளி கிழமையில் கொண்டாடப்படுகிறது. தொன்று தொட்டு இக்கோயிலின் திருவிழாவை பட்டக்காரர் ஆலோசனையின் படி மற்ற கிராம பொதுமக்கள் குழுக்கள் அமைத்து திருவிழாவினை வழிநடத்தி கோலாகலமாக கொண்டாடுகிறார்கள். இக்கோயிலின் திருவிழாவானது கொண்டாடப்படும் பொழுது இதனை சுற்றி உள்ள ஐந்து கிராமங்களின் கிராம தேவதைகளின் திருவிழாவாக வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இத்திருவிழாவானது ஆவணி மாதம் ஒவ்வொரு வார புதன் கிழமைகளிலும் கிராம தெய்வங்களுக்கு பொங்கல் மற்றும் அர்ச்சனைகள் செய்து அதைத் தொடர்ந்து வனதேவதைப் பெட்டி, அக்குமார் பெட்டி மற்றும் கடைசியாக சடையாண்டி பெட்டி போன்றவை ஒவ்வொரு புதன் கிழமைகளிலும் அய்யம்பாளையம் பெரிய முத்தாலம்மன் கோவில் வந்து பிறகு அந்தந்த கோவில்களுக்கு செல்லும். சடையாண்டி கோவிலில் வழிபாடுகள் முடிந்த பிறகு ஐந்து ஊர்களிலும் 15 ஆம் நாள் சாட்டாக முத்தாலம்மன் திருவிழா கொண்டாடப்படும் என்று ஊர் மக்கள் அறிவிப்பு வெளியிடுவர். இந்த ஐந்து ஊர் திருவிழாவானது புரட்டாசி மாதம் கடைசி புதன், வியாழன் வெள்ளிக்கிழமைகளில் ஒன்றாக கொண்டாடப்படுகிறது. ஐந்து ஊரானது.
பிறகு ஒவ்வொரு ஊரிலும் அந்தந்த ஊரின் வழக்கப்படி அடுத்த இரண்டு தினங்களுக்கு வெகு விமர்சியாக திருவிழா கொண்டாடப்படும். பிறகு திருவிழாவின் மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமை, மாலை வேளையில் அம்மன் ஊர்வலம் வந்து கிராம மக்களுக்கு அருள்பாளித்து பூஞ்சோலை சென்றடையும். தொன்று தொட்டு நடந்து வந்த இந்த திருவிழாவை அந்தந்த ஊர் பட்டதாரர்களை நியமித்து வெகு விமர்சியாக ஒவ்வொரு வருடமும் கொண்டாடி வருகிறார்கள். ஒவ்வொரு ஊருக்கும் பட்டதாரர்களை நியமனம் செய்வது அர்ச்சகர்களை நியமனம் செய்வது திருவிழாவை வழிநடத்துவது ஆகிய முக்கிய பொறுப்புகள் அனைத்தும் அந்தந்த ஊர் பட்டதாரர்களை சேர்ந்ததாகும். ஒவ்வொரு ஊர் கோவில்களுக்கும் மற்றும் அதனை சார்ந்துள்ள கிராம தெய்வங்களுக்கும் பூஜை புலாஸ்காரங்கள் செய்வது குறித்து முக்கிய முடிவுகளை ஊர் பொது மக்களின் சார்பாக ஒன்று கூடி முடிவு எடுக்கப்படும்.
அன்று முதல் இன்று வரை அந்தந்த ஊர் பொதுமக்களின் அறிவுறுத்தல் படியும் கிராம பொதுமக்களின் ஆலோசனை படியும் வெகு விமர்சயாக ஐந்து ஊர் முத்தாலம்மன் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads