அய்யம்பாளையம்
தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஒரு பேரூராட்சி From Wikipedia, the free encyclopedia
Remove ads
அய்யம்பாளையம் (ஆங்கிலம்:Ayyampalayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி 12,175 மக்கள்தொகை கொண்ட அய்யம்பாளையம் பேருராட்சியானது திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் (என். எச். 45) தெற்மேற்கில் உட்பகுதியில் அமைந்துள்ள ஊர் ஆகும்.
Remove ads
அமைவிடம்
அய்யம்பாளையம் பேரூராட்சிக்கு கிழக்கில் திண்டுக்கல் 35 கி.மீ..; கொடைரோடு 25 கி.மீ..; தாண்டிக்குடி 35 கி.மீ..; பட்டிவீரன்பட்டி 3 கி.மீ..; சித்தையன்கோட்டை 12 கி.மீ.. மற்றும் வத்தலக்குண்டு 8 கி.மீ.. தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
19.20 ச.கி.மீ... பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 102 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி ஆத்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,380 வீடுகளும், 12,175 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 76% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,034 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 940 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 2,071 மற்றும் 3 ஆகவுள்ளனர்.[5]
மண்ணின் மைந்தர்கள்
- சுதந்திரப் போராட்ட தியாகி சுப்ரமணிய சிவா பிறந்தது இக்கிராமத்திலிருந்து 10 கிமி தொலைவில் உள்ள வத்தலக்குண்டு என்று பலர் கூறுவார்கள். சுப்பிரமணிய சிவாவின் மூதாதையர்கள் இந்த அய்யம்பாளையம் கிராமத்தில் வாழ்ந்து வந்ததாக சில பெரியவர்கள் கூறுகிறார்கள்.
- இசைக்குயில் எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களின் மூதாதையர்கள் இக்கிராமத்தில் ஒரு வீட்டில்தான் வசித்து வந்துள்ளார்கள். பின்னர் இசைத்துறையில் வாய்ப்பு வேண்டி மதுரைக்கு புலம் பெயர்ந்ததாக அவ்வீட்டில் வசித்து வரும் பிரமாணர்கள் கூறுகிறார்கள். ஏனோ தெரியவில்லை சுப்புலட்சுமி அவர்கள் தனது பூர்வீகத்தை கடைசிவரை வெளிப்படுத்திக் கொள்ளவே இல்லை.
- இராமலிங்க நாடாவி என்பவர் மிகச் சிறந்த பத்திர எழுத்தாளர். இவரது பெயரில் பஸ் ஸ்டான்ட்டிற்கு பின்புறம் இராமலிங்க நகர் என்ற ஒரு தெருவே உள்ளது. இவர் பட்டிவீரன்பட்டியில் இருந்த சவுந்தரபாண்டிய நாடாரின் உற்ற நண்பர் ஆவார்.
- ராமலிங்க நாடாவி அவர்களின் மகள் பெருமாள் அம்மாளின் கணவர் அமரர் கிருஷ்ண சாமி பல்லவராயர் என்பவர் ஃபார்வார்டு பிளாக் கட்சியின் நிர்வாகியாக செயல்பட்டு இந்த ஊரில் முதன் முதலாக நடந்த பஞ்சாயத்து போர்டு தேர்தலில் வெற்றி பெற்று அய்யம்பாளையம் பஞ்சாயத்து போர்டில் துணைத் தலைவராக ஆனார். பின்னர் சிலகாலம் தலைவராகவும் இருந்தார். மேலும் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்த பட்டிவீரன்பட்டி என்ற கிராமத்தில் காங்கிரஸ் கட்சி கொடியை அகற்றி அதே கம்பத்தில் ஃபார்வார்டு பிளாக் கட்சி கொடியை ஏற்றி பரபரப்பு ஏற்படுத்தியவர்.
Remove ads
கோயில்கள்
- அருள்மிகு ராசராச சோழ ஈசன் திருக்கோயில்
- மந்தேசி அய்யனார் கோவில்
- பல்லவராயர் பங்களிகளின் கொப்பாட்டி ஈசுவரி அம்மன் கோவில்
- பெரியமுத்தாலம்மன் கோவில்
- அருள்மிகு சின்ன முத்தாலம்மன் திருக்கோயில்
- அருள்மிகு அங்காள ஈஸ்வரி அம்மன் திருக்கோவில்
- அருள்மிகு பனைமரத்து மதுரைவீரன் கோவில்
ஆதாரங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads