அரக்கு மாளிகை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அரக்கு மாளிகை (Palace of Lacquer or Lakshagraha) : அத்தினாபுர அரசகுமாரர்களில் மூத்தவர் தருமரை பீஷ்மர் மற்றும் விதுரரின் ஆலோசனைப்படி திருதராட்டிரன் இளவரசர் ஆக்கினர். இதனால் மனம் நொந்த துரியோதனன் பாண்டவர்களை அஸ்தினாபுரத்திலிருந்து வெளியேற்றத் தீர்மானித்தான்.
துரியோதனனின் சதிச்செயல்படி, திருதராட்டிரன், வாரணாவதம் எனும் கிராமத்தில் சென்று சிறிது காலம் தங்கி வாழ குந்தியுடன் பாண்டவர்களை அனுப்பி வைத்தான். பாண்டவர்கள் அத்தினாபுரத்தை விட்டு வாரணாவதம் செல்லும் போது, காடு தீப்பற்றி எரியும் போது எலிகள் மட்டும் வளையில் புகுந்து தப்பித்துக் கொள்ளும் என்ற விதுரரின் மறைமுக எச்சரிக்கையை தருமர் உணர்ந்து கொண்டார்.
துரியோதனன், புரோசனனைக் கொண்டு, வாரணாவதத்தில் ரகசியமாக எளிதில் தீப்பற்றும் அரக்கு மாளிகை ஒன்றை அமைத்தான்.
வாராணவதம் சென்ற பாண்டவர்கள், புரோசனனின் வேண்டுதலுக்கு இணங்க அரக்கு மாளிகையில் தங்கினர். விதுரனின் கையாள் ஒருவன் அரக்கு மாளிகையிலிருந்து வெளியேற சுரங்கம் ஒன்றை அமைத்தான். சில காலம் கழித்து புரோசனன் அரக்கு மாளிக்கைக்கு தீ வைக்கும் முன்னர், வீமன் அரக்கு மாளிக்கைக்கு தீ வைத்துவிட்டு, குந்தி மற்றும் தன் சகோதரர்களுடன் அரக்கு மாளிகையை விட்டு வெளியேறினான். தீயில் புரோசனன் அரக்கு மாளிகையில் மாண்டான்.[1]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads