திருதராட்டிரன்

From Wikipedia, the free encyclopedia

திருதராட்டிரன்
Remove ads

திருதராட்டிரன் , மகாபாரதக் கதையில் வரும் அத்தினாபுரத்தின் மன்னனான விசித்திரவீரியனின் முதல் மனைவி அம்பிகாவின் மகன் ஆவார். இவர் ஒரு பிறவிக்குருடர். காந்தாரி இவரது மனைவி ஆவார். திருதராட்டிரனுக்கு காந்தாரி மூலம் நூறு மகன்களும், துச்சலை எனும் ஒரு மகளும், பணிப்பெண் சுக்தா மூலம் யுயுத்சு என்ற மகனும் பிறந்தனர். இவரது மகன்களே கௌரவர்கள், இவர்களில் மூத்தவர் துரியோதனன் ஆவர். திருதராட்டிரன், பாண்டு மற்றும் விதுரனின் அண்ணன் ஆகவும், பஞ்சபாண்டவர்களின் பெரியப்பாவாகவும் விளங்கினார். காந்தார தேசத்தின் இளவரசனும் சகுனி, காந்தாரியின் சகோதரன் ஆவார்.

Thumb
விதுரனின் வேண்டுதலுக்கு இணங்க சனத்சுஜாதர், திருதராட்டிரனுக்கு பிரம்ம ஞானம் உபதேசித்தல்

குருச்சேத்திரப் போர் தொடங்குவதற்கு முன் திருதராஷ்டிரனுக்கு நீதிகளை கூறும் போது, சாகாநிலை பற்றி கூறுகிறார் விதுரர். கெளவர்கள் போரில் இறவாநிலையை அடைய வேண்டும் எனும் திருதராஷ்டிரனின் ஆசையை நிறைவேற்ற விதுரர், சனத்குமாரரை வரவழைக்கிறார். சனத்குமாரர், சாகாநிலையை அடையும் வழிகள் குறித்து திருதராஷ்டிரனுக்கு உபதேசிக்கிறார்.

Remove ads

தலைமுறை அட்டவணை

பிரதிபன்சுனந்தா
கங்கைசாந்தனுசத்தியவதிபராசரர்பாலிகன்தேவாபி
பீஷ்மர்சித்திராங்கதன்விசித்திரவீரியன்கிருட்டிண த்வைபாயனன்(எ) வியாசர்சோமதத்தன்
(அம்பிகா மூலம்)(அம்பாலிகா மூலம்)(பணிப்பெண் மூலம்)
திருதராட்டிரன்பாண்டுவிதுரன்பூரிசிரவஸ்2 மகன்கள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads