அரசி அக்மோஸ்-நெபர்தாரி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அரசி அக்மோஸ்-நெபர்தாரி (Ahmose-Nefertari) புது எகிப்திய இராச்சியத்தை நிறுவி ஆண்ட 18-ஆம் வம்சத்தின் முதல் பார்வோன் முதலாம் அக்மோசின் உடன்பிறந்த சகோதரி மற்றும் மனைவியும் ஆவார். இவரது தந்தை செக்கனென்ரே தாவோ, 17-ஆம் வம்சத்தின் பார்வோன் ஆவார். இவரது கணவர் பார்வோன் முதலாம் அக்மோஸ் மறைந்த போது இவரது மகன் முதலாம் அமென்கோதேப் கைக்குழந்தையாக இருந்த எகிப்தின் அரியணை ஏறினார். இவரது மகன் முதலாம் அமென்கோதேப் பருவ வயது அடையும் வரை, அக்மோஸ்-நெபர்தாரியே எகிப்தின் காப்பாட்சியாராக இருந்து எகிப்தை ஆட்சி செய்தார். இவரே பண்டைய எகிப்தின் முதல் பெண் அரசி ஆவார்.


Remove ads
பார்வோன்களின் அணிவகுப்பு
3 ஏப்ரல் 2021 அன்று எகிப்திய அருங்காட்சியகத்திலிருந்து புகழ்பெற்ற 22 பார்வோன்களின் மம்மிகளை எகிப்திய பண்பாட்டின் தேசிய அருங்காட்சியகத்தில் வைப்பதற்கு அழகிய வண்டிகளில் ஏற்றி அணிவகுப்பாக எடுத்துச் செல்லும் போது அரசி அக்மோஸ்-நெபர்தாரியின் மம்மியும் எடுத்துச் செல்லப்பட்டது. [1][1]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads