புது எகிப்து இராச்சியம்

From Wikipedia, the free encyclopedia

புது எகிப்து இராச்சியம்
Remove ads


புது எகிப்து இராச்சியம் (New Kingdom of Egypt), இதனை எகிப்தியப் பேரரசு என்றும் அழைப்பர். எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலத்திற்குப் பின்னர் பண்டைய எகிப்தை, பதினெட்டாம் வம்சம், பத்தொன்பதாம் வம்சம் மற்றும் இருபதாம் வம்சத்தைச் சேர்ந்த பார்வோன்கள் கிமு 1550 முதல் கிமு 1077 முடிய 473 ஆண்டுகள் ஆட்சி செய்தனர்.[1]

விரைவான உண்மைகள் புது எகிப்து இராச்சியம், தலைநகரம் ...

கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு பரிசோதனையின் படி, புது எகிப்து இராச்சியத்தின் காலம் கிமு 1570 - 1544 காலத்தில் துவங்கியது என அறியப்படுகிறது.[2]

எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலத்திற்குப் பின் புது எகிப்து இராச்சியத்தை முதலாம் அக்மோஸ் எனும் பார்வோனால் நிறுவப்பட்டது. புது எகிப்திய இராச்சியத்தின் ஆட்சிக்குப் பின்னர் 1077-இல் எகிப்தில் மூன்றாம் இடைநிலைக் காலம் துவங்கியது.

பண்டைய எகிப்திய வரலாற்றில் புது எகிப்திய இராச்சியத்தின் ஆட்சிக் காலத்தில் பொருளாதாரம், கலை, பண்பாடு ஆகியவற்றில் சிறந்து விளங்கியதால் இவ்வாட்சியை எகிப்தின் பொற்காலம் என அறியப்படுகிறது.[3]

பிற்கால புது எகிப்திய இராச்சியத்தின் 19 மற்றும் 20-வது வம்சங்களின் (1292–1069 ) ஆட்சியை, 19-வது வம்சத்தை நிறுவிய பார்வோன் ராமேசசை முன்னிட்டு, புது இராச்சியத்தை ராமேசேசியர்களின் காலம் என அழைப்பர். [3]

எகிப்தின் இரண்டாம் இடைநிலக் காலத்தில், எகிப்தை ஆண்ட மெசொப்பொத்தேமியா மன்னரான ஐக்சோஸ் ஆட்சியை முடிவு கட்டி, எகிப்தில் புதிய எகிப்து இராச்சியம் நிறுவப்பட்டது. இப்புதிய எகிப்து இராச்சியம் பண்டைய எகிப்து, நூபியா மற்றும் மெசொப்பொத்தேமியா பகுதிகளை ஆண்டது.

Remove ads

வரலாறு

புது எகிப்து இராச்சியத்தின் எழுச்சி

எகிப்தின் பதினெட்டாம் வம்ச பார்வோன்களில் மிகவும் புகழ் பெற்றவர்கள் முதலாம் தூத்மோஸ், முதலாம் அக்மோஸ், மூன்றாம் தூத்மோஸ், மூன்றாம் அமென்கோதேப், அக்கெனதென் மற்றும் துட்டன்காமன் மற்றும் இராணி அட்செப்சுத் ஆவார். இவ்வம்சத்தவர்கள் எகிப்து இராச்சியத்தின் தெற்கில் உள்ள பண்டு பிரதேசங்களைக் கைப்பற்றி, எகிப்தின் எல்லைகளை விரிவாக்கினர். பார்வோன் மூன்றாம் தூத்மோஸ், பண்டைய அண்மை கிழக்கு பகுதிகளைக் கைப்பற்றி உலகின் மாபெரும் பேரரசர்களில் ஒருவராக திகழ்ந்தார். மூன்றாம் அமென்கோதேப் ஆட்சிக் காலத்தில் தான் எகிப்திய மன்னர்களை பார்வோன் என அழைத்தனர். பண்டைய எகிப்திய மொழியில் பார்வோன் என்பதற்கு அரச மாளிகை என்று பொருள். [4]

சூரியக் கடவுள் இராவின் கதிர்களான அதேனின் நினைவாக, பதினெட்டாம் வம்ச பார்வோன் நான்காம் அமென்கொதேப் தன் பெயரை அக்கெனதென் எனப்பெயர் மாற்றிக் கொண்டார். இவரது ஆட்சியில் எகிப்தில் பல கடவுள் வழிபாட்டு முறையை ஒழித்து, அதின் கடவுள் வழிபாடு ஒன்றை மட்டுமே நிலைநிறுத்தினார். இவரது மனைவி நெஃபர்டீட்டீ பண்டைய எகிப்திய சமயத்திற்கு பெரும் பங்கு பற்றினார். [5] அமர்னா நிருபங்கள் மூலம் புது எகிப்து இராச்சியத்தின் செல்வாக்கு தெரியவருகிறது.

பார்வோன் அக்கெனதென் அரசியல் விவகாரங்களில் விருப்பமின்றி செயல்பட்டதால், எகிப்து இராச்சியத்தின் செல்வாக்கு சரியத் துவங்கியது. இதனைப் பயன்படுத்திக் கொண்ட மெசொப்பொத்தேமியாவின் இட்டைட்டுப் பேரரசினர் எகிப்தியர்களின் கீழிருந்த கானான் மற்றும் போனீசியா நாடுகளைக் கைப்பற்றினர்.

புது இராச்சியத்தின் உச்ச நிலை

எகிப்தின் பத்தொன்பதாவது வம்சத்தை நிறுவிய பார்வோன் முதலாம் ராமசேசின் மகன் முதலாம் சேத்தி மற்றும் பேரன் இரண்டாம் ராமேசஸ் புது எகிப்து இராச்சியத்தை புகழின் உச்சியில் இட்டுச் சென்றனர். பதினெட்டாவது வம்சத்தினர் பண்டைய அண்மை கிழக்கின் இட்டைட்டுப் பேரரசிடம் இழந்த கானான் மற்றும் போனீசியா பகுதிகளை இரண்டாம் ராமேசஸ் மீண்டும் கைப்பற்றினார். இரண்டாம் இராமசேஸ் எகிப்தை ஐம்பது ஆண்டுகள் நிலையாக ஆட்சி செய்தார்.[6]

Remove ads

மூன்றாம் இடைநிலைக் காலத்தில் வீழ்ச்சி

எகிப்தின் மூன்றாம் இடைநிலக் காலத்தில் வீழ்ச்சியடைந்த புது எகிப்து இராச்சியத்தின் பார்வோன் 11-ஆம் ராமேசஸ் (கிமு 1107 – 1077) இறப்பிற்குப் பின், பண்டைய எகிப்தின் 21-வது வம்சத்தின் பார்வோன் மென்டெஸ் ஆட்சியை நிறுவினார்.

Thumb
21-வது வம்ச பார்வோன் மூன்றாம் தூத்துமோசின் தலைச்சிற்பம்

புது எகிப்து இராச்சியத்தின் முக்கிய ஆட்சியாளர்கள்

18-ஆம் வம்ச பார்வோன்கள் / அரசிகள்

19-ஆம் வம்ச ஆட்சியாளர்கள்

20-ஆம் வம்ச பார்வோன்கள் (கிமு 1189 – கிமு 1077)

  1. செத்னக்தே
  2. மூன்றாம் ராமேசஸ்
  3. நான்காம் ராமேசஸ்
  4. ஐந்தாம் ராமேசஸ்
  5. ஆறாம் ராமேசஸ்
  6. ஏழாம் ராமேசஸ்
  7. எட்டாம் ராமேசஸ்
  8. ஒன்பதாம் ராமேசஸ்
  9. பத்தாம் ராமேசஸ்
  10. பதினொன்றாம் ராமேசஸ்

படக்காட்சிகள்

Remove ads

பண்டைய எகிப்தின் வரலாற்றுக்கால வரிசை

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads