அரநாழிகநேரம் (புதினம்)

மலையாள எழுத்தாளரான பாறப்புறத்து என்பவர் எழுதிய புதினம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

அரநாழிகநேரம் (அரை நாழிகை நேரம்) என்பது 1967 ஆண்டு மலையாள எழுத்தாளரான பாறப்புறத்து என்பவர் எழுதிய புதினம். இது இவரின் மிகச்சிறந்த புதினங்களில் இது ஒன்றாகும். இப்ப்தினம் 1968-ல் கேரளச் சாகித்திய அகாதமி விருது மற்றும் சாகித்ய பிரவர்தக விருது போன்றவற்றைப் பெற்றது.[1] 1960களில் நடு திருவிதாங்கூர் பகுதியில் நிகழ்வதாக அமைக்கப்பட்ட இந்தக் கதை, தொண்ணூறு வயது முதியவரான குஞ்ஞோனாச்சன் தலைமையிலான ஒரு மரபுவழி கிறித்தவ குடும்பத்தைச் சுற்றி அமைந்தது. முதியவர்களின் வாழ்க்கை எப்படிப்பட்டது என்பது இப்புதினத்தில் அழகாக விவரிக்கப்பட்டுள்ளது.

விரைவான உண்மைகள் நூலாசிரியர், நாடு ...

இப்புதினத்தை சி. போள் வர்க்கீஸ், டைம் டு டை என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். [2] தமிழில் கே. நாராயணன் அரைநாழிகை நேரம் என்ற பெயரில் மொழிபெயர்த்துள்ளார்.[3]

Remove ads

திரைப்படம்

இந்தப் புதினம் 1972 இல் இதே பெயரில் திரைப்படமாக்கப்பட்டது. கொட்டாரக்கர ஸ்ரீதரன் நாயர் இதன் முதன்மை கதாப்பாத்திரமான குஞ்ஞோனாச்சனாக வேடமிட்டார். இத்திரைப்படத்தில் "சமயமாம் ரதத்தில் ஞான் சுவர்க்கயாத்ரசெய்யுன்னு" என்று தொடங்கும் கிரிஸ்தவ பாடல் ஜி. தேவராஜனின் இசையமைப்பில், பி. லீலா, மாதுரி ஆகியோர் குரலில் வெளியானது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads