அருணாசல தேசிகர்

இலங்கையின் சைவ சித்தாந்த அறிஞர். From Wikipedia, the free encyclopedia

Remove ads

அருணாசல தேசிகர் இலங்கையின் சைவ சித்தாந்த வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்த அறிஞராவார். இவர் கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் பிறந்தார். புளியந்தீவு எனும் இடத்தில் பிறந்தார்[1].

விரைவான உண்மைகள் அருணாசல தேசிகர், பிறப்பு ...
Remove ads

வாழ்க்கைக் குறிப்பு

தோற்றம்

காசிநாத சாஸ்திரியார் - சின்னப்பிள்ளை அம்மையார் என்போரின் மகனாவார். இவருக்கு தேசிகமணி, சைவமெயப்போதகர், சைவசித்தாந்தமணி முதலான பெயர்களும் உள்ளன[1].

கல்வி

பெற்றோரிடம் முதற்கல்வியைப் பெற்ற இவர், ஆரம்பக் கல்வியை ஆனைப்பந்திக் கோயில் திண்ணைப்பள்ளியில் தந்தையிடம் கற்றார். பின்னர் புளியந்தீவு மகிழடித் தெருவில் இருந்த சைவப் பள்ளியில் கற்றார். தொடர்ந்து மட்டக்களப்பு அரசடியில் இருந்த மெதடிஸ்த மிஷன் பாடசாலையில் பயின்றார். இளமையிலேயே திறமை வாய்ந்த மாணவராக விளங்கினார்.

Remove ads

மட்டக்களப்பு சுதேச இயக்கமும் தேசிகரும்

இளமைக் காலத்தில் மட்டக்களப்பு சைவ சமயம் சார்பான சுதேச இயக்கத்தின் பங்காளராக விளங்கினார். ஐரோப்பியர்கள் மட்டக்களப்பினை கைப்பற்றியதன் விளைவாகத் தோன்றிய இச் சுதேச இயக்கத்தில் இணைந்து அழியும் நிலையில் சென்று கொண்டிருந்த இந்து சமயத்தை மீட்டு கிறிஸ்தவ சமயத்தவரின் மதமாற்ற நடவடிக்கைகளை எதிர்த்தார்.

தொழில்

தேசிகர் மட்டக்களப்பின் அரசடி மெதடிஸ்த ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சியில் ஈடுபட்டார். ஆனால் இறுதிப் பரீட்சைக்குத் தோன்றுவதற்கும் சான்றிதழ் பெறுவதற்கும் மதம்மாற வேண்டும் எனும் வற்புறுத்தலுக்குப் பணியாது ஆசிரியர் பயிற்சியை இடைநிறுத்தினார்.

சைவத் தமிழ்ப் புலமை

செயற்பாடுகள்

பணிகள்

சொற்பொழிவாற்றுதல்

மட்டக்களப்பின் புகழ்பெற்ற சொற்பொழிவாளராகத் திகழ்ந்தார். தமது 15வது வயதிலிருந்து 65 ஆண்டுகளுக்கும் மேலாகவும் இவரது சொற்பொழிவுகள் நிகழப்பெற்றன. எடுக்கின்ற எந்தப் பொருளிலும் ஆழ்ந்து பேசக் கூடிய திறமை கொண்டிருந்தார். பொதுமக்களை கவரக்கூடிய இனிய தமிழில் நகைச்சுவை ததும்ப உணர்ச்சியோடு பேசுபவர்.

ஒரு சைவ சமயி அகவாழ்விலும் புறவாழ்விலும் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதையே பொதுவாகத் தன் சொற்பொழிவுகளின் பொருளாகக் கொண்டார். மேலும், மட்டக்களப்பில் ஆகம வழிபாட்டு முறைக்கு விளக்கம் கொடுத்தும், கோயில் அமைப்பு, நித்திய நைமித்திய பூசை முறைகள், வழிபாட்டு முறைகள் முதலான பல்வேறு தலைப்புக்களிலும் பேசியுள்ளார்.

பிரசங்கம் செய்தல்

மட்டக்களப்பு மக்களிடையே ஆலய வழிபாட்டின் அவசியம், சைவப் பண்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியம் என்பவற்றை வலியுறுத்தி பல்வேறு பிரசங்கங்களை ஆற்றினார். மட்டக்களப்பு ஆனைப்பந்தி ஆலயத்தில் வெள்ளிக் கிழமைகள் தோறும் தவறாது பிரசங்கம் செய்துவந்தார். தம்மைத் தொடர்ந்து பிரசங்கம் நிகழ்த்தவென மாணவர் பரம்பரை ஒன்றையும் உருவாக்கினார். சீ. நாகையா ஆசிரியர், வ. சித்திவிநாயகம் ஆசிரியர், பண்டிதர். த. கிருஷ்ணபிள்ளை போன்றோர் அவ்வாறு குறிப்பிடத்தக்கோராவர்.

சைவ சமய பேச்சாளர்களுக்கு ஆலோசனை வழங்குதல்

சிறந்த சைவ சமய பேச்சாளர்கள் உருவாவதற்கு பல்வேறு ஆலோசனைகளை கூறினார்

  • பேச்சாளர் ஒருவர் வாழ்ககை முழுதும் கற்றுக்கொண்டிருக்க வேண்டும்.
  • அருட்பாடல்கள், அறநெறிப் பாடல்கள் என்பவற்றை மனனம் செய்திருக்க வேண்டும்.
  • இதிகாச, புராண கதைகளை தெரிந்திருப்பதோடு அவற்றை பயன்படுத்துவதிலும் அக்கறை காட்டவேண்டும்.

சைவ சமய போதனை

அருணாசல தேசிகர் தனது ஆசிரியப் பணியை கிழக்கு மாகாணத்திலுள்ள நாய்ப்பட்டிமுனை இந்து சமயப் பாடசாலையில் ஆரம்பித்தார். பின்னர் ஆனைப்பந்தி சைவப் பாடசாலையில் ஆசிரியராக இணைந்து பின் அப்பாடசாலையில் தலைமை ஆசிரியராகவும் பணி புரிந்து 1949இல் ஓய்வு பெற்றார் [2][1].

எழுத்தாளர்

எழுதிய நூல்கள்

இளமைக் காலந்தொட்டே ஆசிரியப் பணியிலும், சொற்பொழிவுகள் செய்வதிலும் ஈடுபட்ட போதிலும் தமது 60 வயதின் பின்னரேயே நூல்களை எழுதுவதில் ஈடுபட்டார். அவ்வாறு பன்னிரண்டு நூல்கள் இவரால் எழுதப்பட்டவை ஆகும்.

  1. சைவசமய ஆரம்ப போதினி - 1962
  2. சைவசமய இளைஞர் போதினி - 1958
  3. இந்து மாணவர் பக்திப் பாடல் பாமணி மாலை - 1961
  4. இந்து சமய மாத மகத்துவ மான்மியம் - 1960
  5. சைவ இலக்கிய கதாமஞ்சரி - 1964
  6. சைவசமய சிந்தாமணி - 1960
  7. சித்தாந்த சிரோன்மணி
  8. மெய்ஞான தீபம்
  9. சர்வஞானோத்தராகம சாரசங்கிரகம்
  10. அருட்பாத் திரட்டும் அரும்பெரும் பாக்களும்
  11. விநாயக மகத்துவ நுட்பமும் புளியநகர் ஸ்ரீ சித்திவிக்னேசுவர ஆலய மான்மியமும் - 1968
  12. முருகன் மகத்துவ நுட்பம்

இப்பன்னிரு நூல்களும் சைவசமயக் களஞ்சியம் எனப்படுகின்றன.

ஆய்வுக் கட்டுரை எழுதுதல்

Remove ads

தேசிகமணியும் இராமகிருஷ்ண சங்கமும்

நிறைவு

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads