புளியந்தீவு (மட்டக்களப்பு)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
புளியந்தீவு (Puliyanthivu) என்பது மட்டக்களப்பு வாவியில் அமைந்துள்ள தீவுகளில் ஒன்றும், மட்டக்களப்பு நகராகவும் உள்ளது. இங்கு அரசின் முக்கிய பணிமனைகள், வங்கிகள், பாடசாலைகள், வைத்தியசாலைகள், தபால் நிலையம், கடைகள், சமய வணக்க நிலையங்கள் என முக்கிய கட்டமைப்புக்கள் அமைந்துள்ளன.[1]
Remove ads
பெயர்க் காரணம்
மட்டக்களப்புத் தமிழகம் இங்கு புலியன் எனும் வேடர்குலத் தலைவன் ஆண்ட காரணத்தினால் இத்தீவு புளியந்தீவு என அழைக்கப்படலாயிற்று என விபுலானந்த அடிகளை மேற்கோள் காட்டுகின்றது. அதேவேளை, புளிந்தர் என்ற பூர்வீக சாதியினர் இருந்ததாக மகாவம்சம் குறிப்பிடுவதும் அதில் கூட்டிக் காட்டப்பட்டுள்ளது. மேலும், மட்டக்களப்புத் தமிழகத்தின் ஊர்கள் பல மரம், குளம் போன்றவற்றால் அழைக்கப்படுவதைப்போன்று, இத்தீவில் புளிய மரங்கள் நிறைந்து நின்றதால் புளியந்தீவு என அழைக்கப்பட வாய்ப்புள்ளது எனக் கூறுகின்றது.[2]
Remove ads
வரலாறு
11ம் நூற்றாண்டில், சோழப் பேரரசின் கீழ் மட்டக்களப்பினை ஆண்ட கதிர்சுதன் எனப்படும் மன்னனின் ஏழு மந்திரிமார்களில் ஒருவனாகிய புளியமாறன் இங்கு சிற்றரசனாக இருந்ததாக கூறப்படுகின்றது.[3]
இதனையும் பார்க்க
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads