அர்ட்டிகேசீ

தாவரக் குடும்பம் From Wikipedia, the free encyclopedia

அர்ட்டிகேசீ
Remove ads

அர்ட்டிகேசீ (Urticaceae) என்பது ஒரு தாவரக் குடும்பம் ஆகும். இவை தொட்டால் எரிச்சலூட்டும், பூக்கும் தாவரங்கள் ஆகும். இந்தத் தாவரக் குடும்பப் பெயர் அர்டிகா பேரினத்தின் பெயரிலிருந்து வந்தது. அர்டிகேசூ குடும்பத்தில் பல நன்கு அறியப்பட்ட, பயனுள்ள தாவரப் பேரினங்கள் அடங்கியுள்ளன. இதில் அர்டிகா, ராமி ( போஹ்மேரியா நிவியா ), மாமாகி ( பிப்டுரஸ் அல்பிடஸ் ), அஜ்லாய் ( டெப்ரேஜியா சானெப் ) ஆகிய பேரினங்கள் அடங்கும்.

விரைவான உண்மைகள் Nettle family, உயிரியல் வகைப்பாடு ...

ராயல் தாவரவியல் பூங்கா, கியூ மற்றும் கிறிஸ்டென்ஹஸ்ஸ் மற்றும் பைங் (2016) ஆகியவற்றின் தரவுத்தளத்தின்படி இந்தக் குடும்பத்ததில் 53 பேரினங்களும், சுமார் 2,625 இனங்களும் உள்ளன.[2] பைலியா (500 முதல் 715 இனங்கள்), எலடோஸ்டெமா (300 இனங்கள்), அர்டிகா (80 இனங்கள்), செக்ரோபியா (75 இனங்கள்) ஆகியவை மிகப்பெரிய பேரினங்களாகும். செக்ரோபியாவில் பல எறும்புவாழ் தாவரங்கள் உள்ளன.[3]

துருவப் பகுதிகளைத் தவிர, அர்டிகேசி இனங்கள் உலகம் முழுவதும் காணப்படுகின்றன.

Remove ads

விளக்கம்

அர்ட்டிகேசி இனங்களில் புதர்கள் (எ.கா பைலியா ), லியானாக்கள், மூலிகைகள் (எ.கா அர்டிகா, பரியேடாரியா ), அரிதாக, மரங்கள் (டென்ட்ரோக்னைட், செக்ரோபியா) ஆகியவை உள்ளன. இவற்றின் இலைகள் பொதுவாக மாறுபட்ட அல்லது எதிர் ஒழுங்குள்ள தனியிலைகளாகும். சாதாரணமாக இலையடிச் செதில் உண்டு. இவற்றில் உள்ள நுண் மயிர்கள் உடலில் பட்டால் அரிக்கும் தன்மையுடையது. பூக்கள் மிகச் சிறியவை. அநேகமாக ஒருபாலின. மேலும் அவை ஒரு தாவர இருபால் மலர் நிலை அல்லது இருபால் செடி ஆகிய இரண்டிலும் இருக்கலாம். இத்தாவரங்கள் காற்றின் வழியாக மகரந்தச் சேர்க்கை செய்பவை . மகரந்தங்கள் முதிர்ச்சியடைந்து, அவற்றின் உள் வளைந்திருக்கும் இழைகள் விருட்டென்று நேராக்கும் போது, அவற்றில் உள்ள பெரும்பாலான மகரந்தம் சிதறடிக்கப்படும். இது ஒரு விசித்திரமான மற்றும் வெளிப்படையான சிறப்பு இயங்குமுறையாகும்.

Remove ads

படக் காட்சியகம்

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads