அறிவியல் களஞ்சியம்
அறிவியல் கட்டுரைகளுடைய 19 களஞ்சியத் தொகுதிகள் From Wikipedia, the free encyclopedia
Remove ads
அறிவியற் கலைக்களஞ்சியம் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தால் அறிவியல், பொறியியல் துறைகளுக்கென வெளியிடப்பட்ட கலைக்களஞ்சியமாகும்.[1] பத்தொன்பது தொகுதிகளாக இது வெளிவந்துள்ளது. இதில் 10 000 விரிவான கட்டுரைகள் நூற்றுக்கும் மேற்பட்ட துறை சார்ந்த அறிஞர்களால் எழுதப்பட்டுள்ளன.
வரலாறு
அறிவியல் களஞ்சியம் தொகுக்கும் பணி மார்ச் 1983 ம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்டது. முதன்மைப் பதிப்பாசிரியராக பி. எல். சாமி இரண்டரை ஆண்டுகள் 1987 நடுப்பகுதி வரை செயற்பட்டார்.[2] இரண்டாவது முதன்மைப் பதிப்பாசிரியராக கி. கண்ணபிரான் அவர்கள் ஓராண்டு செயல்பட்டார்.[3] மூன்றாம் பதிப்பாசிரியராக உலோ. செந்தமிழ்க்கோதை அவர்கள் 1988 ஜூன் முதல் செயல்பட்டார்.[4] நான்காம் பதிப்பாசிரியராக கு. கூ. அருணாச்சலம் அவர்கள் செயல்பட்டார்.[5] ஐந்தாம் முதன்மைப் பதிப்பாசிரியராக ந. கோவிந்தசாமி அவர்கள் செயல்பட்டார். [6] இறுதித் தொகுதிகளில் (17,18,19) இராம. சுந்தரம் அவர்கள் செயல்பட்டார்.[7] தொடக்கத்தில் இக்களஞ்சியத் திட்டத்தை உருவாக்கி ஒப்புதல் பெற்றவரும் இவரே என்பது குறிப்பிட தக்கது.
Remove ads
துறைகள்
அறிவியல் களஞ்சியத்தில் பின்வரும் துறைகளை உள்ளடக்கத் திட்டமிட்டு நடைமுரைப்படுத்தப்பட்டது. [8]
- பொதுப் பொறியியல்
- மின் பொறியியல், இயந்திரப் பொறியியல்
- பொது மருத்துவம்
- அறுவை மருத்துவம்
- கணிதம், புள்ளியியல், மக்கள் தொகையியல்
- இயற்பியல்
- வேதியியல்
- உயிரியல், வேளாண்மை, சூழ்நிலையியல்
- கடலியல், கப்பல் கட்டுதல்
- ஆற்றல் அறிவியல்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads