உலோ. செந்தமிழ்க்கோதை
எழுத்தாளர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
உலோ. செந்தமிழ்க்கோதை (22 திசம்பர் 1945 – 1 பெப்ரவரி 2024) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர் ஆவார்.
Remove ads
வாழ்க்கைக் குறிப்பு
திருவள்ளூர் மாவட்டம், புச்சிரெட்டிபள்ளி எனும் ஊரில் பிறந்த இவர் பொறியியல் துறையில் அறிவுநுட்பம் வாய்ந்தவராக இருந்தார். கிண்டி பொறியியல் கல்லூரியில் மின் பொறியியல் இளவல் பட்டமும், கோயமுத்தூர் பூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரியில் முதுநிலைப் பட்டமும் பெற்றார். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 33 ஆண்டுகள் பணிபுரிந்து பணி ஓய்வு பெற்ற இவர் முனைவர் பட்டம் பெற்றவராவார்.
எழுத்துப் பணி
தமிழக அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி வரலாற்றில் அக்கறை கொண்டிருந்தார். இவர் எழுதிய “மக்கள் அறிவியல் இலக்கியம் ; நோக்கும் போக்கும்” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களில் பொறியியல், தொழில்நுட்பம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றது. அறிவியல் தமிழ் ஆக்கத்தில் கவனம் செலுத்தி, பல கலைச் சொற்களை உருவாக்கினார். பொறியியல், அறிவியல், மக்கள் அறிவியல், அறிவியல் வரலாற்று வரைவியல், மெய்யியல், சமூகவியல் ஆகிய துறைகளிலும் கட்டுரைகள் எழுதினார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக அறிவியல், தொழில்நுட்ப ஆய்விதழின் ஆசிரியர் குழுவில் பணியாற்றிய உலோ. செந்தமிழ்க்கோதை தமிழ் இணையக் கல்விக்கழகம் வெளியிட்ட 14 கலைச்சொல் அகராதி அமைப்பிலும் பங்காற்றினார்.
Remove ads
எழுதிய நூல்கள்
- மக்கள் அறிவியல் இலக்கியம் நோக்கும் போக்கும்[1]
- செயற்கைக்கோள்கள்
- எந்திர நாய்க்குட்டியும் நிலாப்பையனும் (ஐசாக் அசிமோவின் 5 கதைகள்)
- நிலவில் கேட்ட மழலைக்குரல் (ஆர்தர் சி. கிளார்க்கின் 26 கதைகள்)
- சில்லுமனிதனின் புன்னகை (அசிமோவின் கதைகள்)
- எளிய படவிளக்க எந்திரப்பொறியியல் அகராதி
- சுற்றுச்சூழல் கலைச்சொல் விளக்க அகராதி[2]
பெற்ற விருதுகள்
- அண்ணா பல்கலைக்கழகம் தமிழ்ப் புலவர் குழு விருது, 1991
- தமிழ்நாடு அரசு சிறந்த நூலாசிரியர் விருதும் பரிசும், 2007
- தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், 2019
இறப்பு
உலோ. செந்தமிழ்கோதை தனது இல்லத்தில் 2024 பெப்ரவரி 1 அன்று காலை பத்து மணிக்கு காலமானார். 2024 பெப்ரவரி 2 அன்று பகலில் அவரது இறுதிச்சடங்கு நடைபெற்றது.
மேற்கோள்கள்
உசாத்துணை
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads