அலங்காரத் தாவரம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அலங்காரத் தாவரம் (Ornamental plant) அல்லது தோட்டத் தாவரம் என்பது, அதன் வணிக அல்லது வேறு தேவைகளுக்காகவன்றி, அதன் அலங்கார இயல்புகளுக்காக வளர்க்கப்படும் தாவரத்தைக் குறிக்கும்.[1][2] அலங்காரத் தாவரங்கள் தோட்டக்கலை வல்லுணர்களால் மிகவும் பயன்படுத்தப்படுகின்றன. பூங்காக்களிலும், கட்டிடங்களின் உள்ளேயும் இத்தகைய தாவரங்கள் விரும்பி வளர்க்கப்படுகின்றன.

அலங்காரத் தாவரங்கள், பூக்கும் தாவரங்கள் (flowering plants), இலைத் தாவரங்களாக (foliage plants) இருக்கலாம். இவற்றைவிட தாவரங்களின், பழங்கள், பட்டைகள், தண்டுகள் போன்றவற்றின் அழகுக்காகவும் அவை வளர்க்கப்படுவதுண்டு.
மரங்கள், செடிகள், கொடிகள், புற்கள், நிலமூடிகள் (Ground Covers) எனப் பல வகைகளையும் சேர்ந்த அலங்காரத் தாவரங்கள் உள்ளன. அவற்றின் கிளைகள் வளரும் விதம், இலைத்தொகுதியின் ஒட்டுமொத்த மேற்பரப்புத் தன்மை (texture), நிறம் என்பனவும் தாவரங்களின் அழகூட்டும் இயல்புக்குப் பங்களிப்புச் செய்கின்றன.
Remove ads
அலங்காரத் தாவர வகைகள்
- ரெசீனா (Dracaena)
- கோடிளீன் (Cordyline)
- பாம்ஸ் (Palm)
- சாத்தாவாரி (Asparagas)
- அலொக்கேசியா (Alocasia)
- பன்னம் (fern)
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads