சாத்தாவாரி

From Wikipedia, the free encyclopedia

சாத்தாவாரி
Remove ads

சாத்தாவாரி அல்லது தண்ணீர் விட்டான் (Asparagus racemosus) என்பது இந்தியா, இலங்கை, இமயமலை ஆகிய இடங்களில் காணப்படும் அஸ்பராகஸ் இனத் தாவரம். ஒன்று அல்லது இரண்டு மீட்டர் வளரும் இது சரளைக்கல், கற்கள் கொண்ட மணலில், கடல்மட்டத்திலிருந்து 1,300–1,400 மீட்டர் சமவெளிகளில் வளரும்.[2][3] இது 1799இல் விபரிக்கப்பட்டது.[1] இது மூலிகை மருந்து உட்பட பல பயன்களைத் தரவல்லது.

விரைவான உண்மைகள் Satavar, உயிரியல் வகைப்பாடு ...
Thumb
தண்ணீர் விட்டான் கிழங்கும் கொடியும்
Remove ads

பெயர்கள்

இது தண்ணீர்விட்டான், சதாவேரி, சதாவரி, நாராயணி, உதகமூலம், சீக்குவை, பறணை, பீருதந்தி ஆகிய பல்வேறு பெயர்களைக் கொண்டது ஆகும். இதன் ஊசி போன்ற இலைகளும் கிளைகளும் வரிவரியாக மேலேறுவதால் ‘வரிவரி’ எனும் பெயரும் உண்டு. இந்தக் கொடியில் இருந்து கிடைக்கும் கிழங்கானது வெப்பத்தைக் குறைக்கும் குளிர்ச்சித் தன்மைக் கொண்டது என்பதால், ‘நீர்’விட்டான், ‘நீர்’வாளி ஆகிய பெயர்கள் ஏற்பட்டிருக்கலாம். நூறு (சதா) நோய்களைத் தீர்க்கும் மூலம் (வேர்) என்பதால் ‘சதாமூலம்’ என்ற பெயரும் இதற்குண்டு.

Remove ads

விளக்கம்

இது முட்கள் கொண்ட கொடி வகைத் தாவரமாகும். இதன் இலைகள் மெல்லியதாகவையாகவும், ஊசி போல் சிறுசிறுயதாகவும் இருக்கும். இது வெள்ளை நிறத்தில் வாசனை மிக்கப் பூக்களைக் கொண்டதாகவும், இதன் பழங்களின் சிவப்பு நிறம் கொண்டவையாகவும் இருக்கும். இது தன் வேர்களில் விரல் வடிவ வெண்ணிறத்திலான கிழங்குகளைக் கொண்டிருக்கும். இதில் தனக்கான நீரையும், உணவையும் சேமித்து வைத்திருக்கும். இந்த கிழங்கானது பலவகையில் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.[4]

Remove ads

உசாத்துணை

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads