அலுமினியம் அசிட்டோடார்டரேட்டு

வேதிச் சேர்மம் From Wikipedia, the free encyclopedia

அலுமினியம் அசிட்டோடார்டரேட்டு
Remove ads

அலுமினியம் அசிட்டோடார்டரேட்டு (Aluminium acetotartrate) எனப்து C6H7AlO8 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஒரு கரிம அமிலம், மலச்சிக்கல் காரணி மற்றும் நச்சுக்கொல்லி என்று அறியப்படும் இச்சேர்மம் அசிட்டிக் அமிலம் மற்றும் டார்டாரிக் அமிலம் ஆகியனவற்றின் அலுமினியம் உப்பாகும் [1]

விரைவான உண்மைகள் ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர், மருத்துவத் தரவு ...
Remove ads

தோற்றம்

நிரமற்ற அல்லது மஞ்சள் நிறப்படிகங்களாக அலுமினியம் அசிட்டோடார்டரேட்டு தோன்றுகிறது. தண்ணீரில் நன்றாகவும் ஆல்ககால் மற்றும் ஈதரில் மெதுவாகவும் கரைகிறது [1].

பயன்பாடுகள்

மூச்சுப் பாதை சிக்கல்களுக்கான சிகிச்சையில் பயன்படும் கரைசல்களில் அலுமினியம் அசிட்டோடார்டரேட்டு 0.5-2% கரைசலாகப் பயன்படுத்தப்படுகிறது. அலுமினியம் அசிட்டேட்டு கரைசலுக்கு மாற்றாகவும் 1-3% கரைசலாக அலுமினியம் அசிட்டோடார்டரேட்டு பயன்படுத்தப்படுகிறது.

பனிக்கடி, மொட்டுத் தோலழற்சி ஆகியனவற்றுக்கான மருந்துடை நீர்மமாகவும், தேய்மான நாசியழற்சிக்கு போரிக் அமிலத்துடன் சேர்ந்த மூக்குப்பொடியாகவும் பயன்படுகிறது. மேலும் இது புண்ணாற்றும் கிருமிநாசினி மேற்பூச்சாகவும் பயன்படுகிறது [1]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads