அலூசியன் தீவுகள்
வடபசிபிக் கடலில் நீண்டு இருக்கும் தீவுக்கூட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
அலூசியன் தீவுகள் (Aleutian Islands) என்பவை வடக்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள முன்னூறிற்கும் மேற்பட்ட தீவுகளை உள்ளடக்கிய ஒரு தீவுக் கூட்டம் ஆகும். இவற்றின் மொத்தப் பரப்பளவு 6,821 சதுர மைல் (17,666 கி.மீ.²). அலாஸ்கா குடாவில் இருந்து மேற்கே 1,200 மைல் (1,900 கி.மீ.) வரை பரந்துள்ளது. இத்தீவுக் கூட்டத்தின் பெரும் பகுதி அலாஸ்காவில் இருந்தாலும், மேற்குப் பக்கத்தின் கடைசிப் பகுதியில் ஒரு சிறிய கொமண்டாஸ்கி தீவுகள் ரஷ்யாவில் உள்ளது. மொத்தம் 57 எரிமலைகள் இத்தீவுக் கூட்டத்தில் உள்ளன. 1867ம் ஆண்டுக்கு முன்னர் இவை கத்தரீன் தீவுக்கூட்டம் என்றழைக்கப்பட்டன.


Remove ads
மக்கள்
இத்தீவுகளில் உள்ள பழங்குடியினர் தம்மை உனாங்கன் என அழைக்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் "அலூட்" என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் பேசும் மொழி அலூட் மொழி ஆகும். இம்மொழி எஸ்கிமோ-அலூட் மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. இம்மொழிக் குடும்பம் வேறு எந்த மொழியுடனும் தொடர்புடையதல்ல.
2000 இல் இத்தீவுகளின் மொத்த மக்கள் தொகை 8,162 ஆகும். இவர்களில் 4,283 பேர் உனலாசுக்கா தீவில் வாழ்கின்றனர்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads