1867
From Wikipedia, the free encyclopedia
Remove ads
1867 (MDCCCLXVII) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டு ஆகும்.



Remove ads
நிகழ்வுகள்
- ஜனவரி 1 - ஐக்கிய அமெரிக்காவில் ஒஹாயோவின் "சின்சினாட்டி" நகருக்கும் கென்டக்கியின் "கொவிங்டன்" நகருக்கும் இடையில் ஜோன் ஏ. ரோப்லிங் தொங்கு பாலம் திறக்கப்பட்டது. இதுவே உலகின் அதி நீளமான தொங்கு பாலமாகும்.
- பெப்ரவரி 17 - சூயஸ் கால்வாய் ஊடாக முதலாவது கப்பல் பயணித்தது.
- மார்ச் 30 - அலாஸ்கா மாநிலம் $7.2 மில்லியன் களுக்கு (2 சதம்/ஏக்கர், $4.19/கி.மீ.²), உருசியாவின் மன்னர் அலெக்சாண்டர் II இடமிருந்து ஐக்கிய அமெரிக்காவின் அரசுச் செயலாளர் வில்லியம் செவார்ட் வாங்கினார்.
- மே 29 - ஆஸ்திரியா-ஹங்கேரி பேரரசு அமைக்கப்பட்டது.
- ஜூன் 19 - மெக்சிகோவின் அரசன் முதலாம் மாக்சிமிலியன் சுட்டுக் கொல்லப்பட்டான்.
- ஆகத்து 28 - நாகை மாவட்டத்தில் அமைந்திருந்த சூளாமணி புத்த விகாரத்தை இடிக்க ஆங்கிலேய அரசு உத்தரவிட்டது.
- செப்டம்பர் 1 - கொழும்பு ஒப்சேர்வர் ஆங்கிலப் பத்திரிகையின் பெயர் சிலோன் ஒப்சேர்வர் என மாற்றப்பட்டது.[1]
- செப்டம்பர் 30 - ஐக்கிய அமெரிக்கா மிட்வே தீவின் அதிகாரத்தைக் கைப்பற்றியது.
- அக்டோபர் 27 - கரிபால்டியின் படைகள் ரோம் நகருள் புகுந்தன.
- நவம்பர் 23 - இரண்டு ஐரிஷ் விடுதலைப் போராளிகளை சிறையிலிருந்து தப்பிச்செல்ல உதவியமைக்காக மூன்று ஐரிஷ் தேசியவாதிகள் இங்கிலாந்து, மான்செஸ்டரில் தூக்கிலிடப்பட்டனர்.
Remove ads
தேதி அறியப்படாத நிகழ்வுகள்
- ஜனவரி - இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் தந்திக் கம்பிகள் (telegraphic cable) இணைக்கப்பட்டன.
- மார்ச் - யாழ்ப்பாணம், நெடுந்தீவில் பெரும் வறட்சி ஏற்பட்டது.
- கார்ல் மார்க்ஸ் தனது மூலதனம் நூலின் முதல் பகுதியை வெளியிட்டார்.
- கண்டிக்கு தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது.
- கனடா கூட்டரசு உருவானது.
பிறப்புகள்
- மார்ச் 3 - பாண்டித்துரைத் தேவர், தமிழறிஞர் (இ. 1911
- மே 22 - உமையாள்புரம் சுவாமிநாத ஐயர், கருநாடக இசைக் கலைஞர் (இ. 1946)
- ஜூன் 8 - பிராங்க் லாய்டு ரைட், அமெரிக்கக் கட்டிடக்கலைஞர் (இ. 1959)
- ஆகத்து 14 - ஜோன் கல்ஸ்வோதி, நோபல் பரிசு பெற்றவர் (இ. 1933)
- நவம்பர் 7 - மேரி க்யூரி, வேதியியலாளர் (இ. 1934)
இறப்புகள்
- ஆகத்து 25 - மைக்கேல் பரடே, அறிவியலாளர் (பி. 1791)
மேற்கோள்கள்
1867 நாட்காட்டி
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
