அல்மாஸ்பெக் அத்தம்பாயெவ்

From Wikipedia, the free encyclopedia

அல்மாஸ்பெக் அத்தம்பாயெவ்
Remove ads

அல்மாஸ்பெக் சார்செனோவிச் அத்தம்பாயெவ் (Almazbek Sharshenovich Atambayev, சிரில்லிக்: Алмазбек Шаршенович Атамбаев; பிறப்பு: செப்டம்பர் 17, 1956) கிர்கிஸ்தான் அரசியல்வாதி ஆவார். இவர் 2010, டிசம்பர் 17 முதல் அந்நாட்டின் பிரதமராகப் பதவியில் உள்ளார். இவர் முன்னர் 2007 மார்ச் 29 முதல் 2007 நவம்பர் 28 வரை பிரதமராகப் பதவியில் இருந்தார். 1999 சூலை 30 முதல் கிர்கிஸ்தான் சமூக சனநாயகக் கட்சியின் தலைவராகவும் பதவியில் உள்ளார். 2011 அக்டோபர் 30 இடம்பெற்ற அரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டினார்.

விரைவான உண்மைகள் அல்மாஸ்பெக் அத்தம்பாயெவ்Almazbek AtambayevАлмазбек Атамбаев, கிர்கிஸ்தான் அரசுத்தலைவர் ...
Remove ads

அரசியல் வாழ்க்கை

2000 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இடம்பெற்ற அரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிட்டு 6% வாக்குகளை மட்டும் பெற்றுத் தோல்வியடைந்திருந்தார்[1]. 2005 ஆம் ஆண்டில் இருந்து தொழிற்துறை, வணிகம், மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராகத் தேர்தெடுக்கப்பட்டார்[2]. 2006 ஏப்ரல் மாதத்தில் அவர் தனது பதவியைத் துறந்தார்[3].

நவம்பர் 2006 இல் அரசுக்கு எதிராக தலைநகர் பிஷ்கெக் நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களுக்குத் தலைமை வகித்தவர்களில் இவரும் ஒருவர்[4].

Remove ads

அரசுத்தலைவர் தேர்தல், 2009

20 ஏப்ரல் 2009 இல் இடம்பெற்ற அரசுத்தலைவர் தேர்தலில் தான் போட்டியிடுவதாக அறிவித்தார்[5]. ஆனாலும், தேர்தல் நாளன்று தேர்தலில் முறைகேடுகள் இடம்பெறுவதாகக் குற்றம் சாட்டி தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து ஒதுங்கிக் கொண்டார்[6].

பிரதமராக

2007 மார்ச் மாதத்தில் பிரதமர் அசீம் அசாபெக்கோவ் பதவி துறந்ததை அடுத்து அரசுத்தலைவர் குர்மான்பெக் பாக்கியெவ் அத்தம்பாயெவைப் பதில் பிரதமராக நியமித்தார்[7]. இப்பதவி பின்னர் நாடாளுமன்றத்தினால் 48-3 வாக்குகலால் அங்கீகரிக்கப்பட்டது[8]. 2007 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பொது வாக்கெடுப்பை அடுத்து அத்தம்பாயெவின் அரசைக் கலைக்க அரசுத்தலைவர் உத்தரவிட்டார். அத்தம்பாயெவ் இடைக்கலப் பிரதமராக நியமிக்கப்பட்டார். ஆனாலும் அவர் தனது பதவியை 2007 நவம்பரில் துறந்தார்[9][10][11].

2010 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை அடுத்து அத்தம்பாயெவ் கூட்டணி அரசுக்குப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்[12].

அரசுத்தலைவர் தேர்தல், 2011

2011 ஆம் ஆண்டு அரசுத்தலைவர் தேர்தலில் இவர் வெற்றி பெற்றார். இடைக்கால அரசுத்தலைவராக இருக்கும் திருமதி ரோசா ஒட்டுன்பாயெவா இத்தேர்தலில் போட்டியிடவில்லை.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads