2011
From Wikipedia, the free encyclopedia
Remove ads
2011 (MMXI) கிரெகோரியன் நாட்காட்டியில் ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமாகும் ஒரு சாதாரண ஆண்டு ஆகும். ஐக்கிய நாடுகள் சபை இவ்வாண்டை அனைத்துலக வனங்கள் ஆண்டாகவும், அனைத்துலக வேதியியல் ஆண்டாகவும் அறிவித்துள்ளது.
Remove ads
நிகழ்வுகள்
- சனவரி 1 - யூரோ வலயத்தின் 17வது உறுப்பு நாடாக எசுத்தோனியா இணைந்தது.
- சனவரி 3 - சிலியின் நடுப்பகுதியில் 7.1 அளவு நிலநடுக்கம் பதியப்பட்டது.
- சனவரி 8 - 1811 இல் தொலைந்த யூஎஸ்எஸ் ரிவெஞ்ச் என்ற அமெரிக்கப் போர்க்கப்பலின் எச்சங்கள் ரோட் தீவில் கண்டுபிடிக்கப்பட்டன.
- சனவரி 9 – தெற்கு சூடான் விடுதலைக்கான பொது வாக்கெடுப்பு நடத்தியது.
- சனவரி 9 - இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பலர் உயிரிழந்தனர்.
- சனவரி 10 - ஈரானில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளாகியதில் 72 பேர் உயிரிழந்தனர்.
- சனவரி 11 - புவியைப் போன்ற மிகச்சிறிய கெப்லர்-10பி என்ற புறக்கோள் கண்டுபிடிக்கப்பட்டது.
- சனவரி 12 - ஆத்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் இடம்பெற்ற வரலாறு காணாத வெள்ளத்தில்,குறைந்தது 18 பேர் உயிரிழந்தனர்.
- சனவரி 13 - பிரேசில் வெள்ளப்பெருக்கில் 500 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
- சனவரி 14 - சபரிமலைக்கு அருகே கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 100 பேர் உயிரிழந்தனர்.[1]
- சனவரி 14 - துனீசியாவில் மக்கள் கொந்தளிப்பை அடுத்து அரசுத்தலைவர் சவுதி அரேபியாவுக்குத் தப்பியோடினார்.
- ஏப்ரல் 3 - கசக்ஸ்தான் நாட்டின் அதிபர் நுர்சுல்தான் நசர்பாயெவ் தேர்தலில் 95.5% வாக்குகள் பெற்று சாதனை படைத்தார்.
Remove ads
விருதுகள்
இறப்புகள்
- சனவரி - அரியான்பொய்கை செல்லத்துரை, ஈழத்துக் கலைஞர்
- சனவரி 7 - சிலோன் சின்னையா, இலங்கைத் தமிழத் திரைப்பட நடிகர் (பி. 1941)
- சனவரி 22 - அஸ்லம் கொகுகர், பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர் (பி. 1920)
- சனவரி 24 - பீம்சென் ஜோஷி, இந்துஸ்தானி இசைப் பாடகர் (பி. 1922)
- பெப்ரவரி 20 - மலேசியா வாசுதேவன், பாடகர், நடிகர்
- ஏப்ரல் 6 - கல்பகம் சுவாமிநாதன், வீணை இசைக்கலைஞர் (பி. 1922)
- ஏப்ரல் 6 - சுஜாதா, தமிழ்த் திரைப்பட நடிகை (பி. 1952)
- ஏப்ரல் 20 - ர. சு. நல்லபெருமாள், தமிழ் எழுத்தாளர்
- ஏப்ரல் 24 - சத்திய சாயி பாபா, ஆன்மிக குரு (பி, 1926)
- மே 1 - உசாமா பின் லாதின், அல்கைதா தலைவர் (பி. 1957)
- மே 1 - அலெக்ஸ், தமிழ்த் திரைப்பட நடிகர்
- மே 4 - கி. கஸ்தூரிரங்கன், தமிழக எழுத்தாளர் (பி. 1933)
- மே 11 - ஆ. ச. தம்பையா, தமிழக மருத்துவர் (பி. 1924)
- மே 21 - சுவாமி அஜராத்மானந்தா, மட்டக்களப்பு இராமகிருஷ்ண மட முதல்வர் (பி. 1950)
- சூன் 3 - இலியாசு காசுமீரி, அல்கைதா உறுப்பினர் (பி. 1964)
- சூலை 6 - கார்த்திகேசு சிவத்தம்பி, ஈழத்துத் தமிழறிஞர் (பி. 1932)
- சூலை 8 - கா. கலியபெருமாள், மலேசியத் தமிழறிஞர் (பி. 1937)
- செப்டம்பர் 18 - டி. கே. கோவிந்த ராவ் கருநாடக இசைக் கலைஞர் (பி. 1929)
2011 நாட்காட்டி
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads