அல் நசிரியா

ஈராக்கில் உள்ள ஒரு நகரம் From Wikipedia, the free encyclopedia

அல் நசிரியா
Remove ads

நசிரியா அல்லது அல் நசிரியா (Nasiriyah, அரபி: الناصرية; BGN: An Nāşirīyah; also spelled Nassiriya or Nasiriya) என்பது ஈராக்கின் நகரங்களில் ஒன்றாகும். புறாத்து ஆற்றின் ஆற்றங்கரையில் அல் நசிரியா நகரம் அமைந்துள்ளது. இது பகுதாதிலிருந்து ஏறத்தாழ 225 மைல்கல் (370 km) தொலைவில் தென்மேற்காக அமைந்துள்ளது. உர் என்ற பண்டைய நகரத்தின் இடிபாடுகளின் அருகாமையில் அல் நசிரியா நகரம் அமைந்துள்ளது. இது டி குவார் மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். 2003இன் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் அல் நசிரியா நகரத்தின் மக்கள் தொகை 560,000 ஆகும். அல் நசிரியா நகரம் ஈராக்கின் நான்காவது மிகப்பெரிய நகரமாகும்.[1] இந்த நகரம் முசுலிம், மண்டியான், ஜெவ் போன்ற சமய பல்வகைமை மக்கள் தொகையை 20ஆம் நூற்றாண்டில் கொண்டிருந்ததது.[2] ஆனால், தற்போதைய காலப்பகுதியில் அல் நசிரியா நகரத்தின் முதன்மையான சமயப் பிரிவாக விளங்குவது சியா இசுலாம் ஆகும்.[1]

விரைவான உண்மைகள் நசிரியா அரபி: الناصريةAn Nāṣirīyah, நாடு ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads