அழகான நாட்கள்

சுந்தர் சி. இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

அழகான நாட்கள்
Remove ads

அழகான நாட்கள் (Azhagana Naatkal) என்பது 2001 ஆம் ஆண்டைய இந்திய தமிழ் நகைச்சுவை திரைப்படம் ஆகும். இப்படத்தை சுந்தர் சி. இயக்க, கார்த்திக் மற்றும் ரம்பா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர், மேலும் உள்ளத்தை அள்ளித்தா (1996) மற்றும் உனக்காக எல்லாம் உனக்காக (1999) ஆகியவற்றின் வெற்றிகளுக்குப் பிறகு சுந்தருடன் இந்த ஜோடியின் மூன்றாவது படமாக இது இருந்தது. இப்படத்தில் மும்தாஜ், கவுண்டமணி, செந்தில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். படத்திற்கு தேவா இசையமைத்தார். 7 திசம்பர் 2001 அன்று வெளியான இப்படம், மலையாள திரைப்படமான மின்னாராமின் மறு ஆக்கம் ஆகும், மேலும் இது ஜெய்சங்கரின் திரைப்படமான பெண்ணே நீ வாழ்க படத்தை அடிப்படையாகக் கொண்டது.[1][2]

விரைவான உண்மைகள் அழகான நாட்கள், இயக்கம் ...
Remove ads

கதை

இந்துவும் சந்திருவும் (ரம்பா மற்றும் கார்த்திக்) காதலிக்கிறார்கள். இந்து தீடீரென்று காணாமல் போகிறாள் சந்திருவுக்கு ரேகாவுடன் (மும்தாஜ்) நிச்சயதார்த்தம் ஏற்படுகிறது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு சிறுமியுடன் இந்து மீண்டும் வருகிறாள். அந்த சிறுமி சந்திருவின் மகள் என்று கூறுகிறாள். சந்திரு அதை கடுமையாக மறுத்து, அதன் உண்மையை அறிய முயற்சிக்கிறான். நகைச்சுவையான பல காட்சிகளுக்குப் பிறகு, இந்துவின் சகோதரியை மயக்கிய சந்திருவின் திருமணமான சகோதரனின் சட்டவிரோத மகள் அந்தப் பெண் என்பதை அறியவருகிறது. வில்லனான அவனது சகோதரனின் பயனற்ற முயற்சிக்குப் பிறகு, ரேகாவிடம் மன்னிப்பு கேட்காமல் சந்திரு இந்துவை வேகமாக அடைகிறான். ரேகா எந்த விளக்கமும் அளிக்காமல் ஆரம்பக் காட்சியில் இந்து காணாமல் போன்ற செயலைச் செய்கிறாள்.

Remove ads

நடிகர்கள்

தயாரிப்பு

சிம்ரன் முதலில் ரம்பாவுக்கு பதிலாக இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யபட்டிருதார்.[3] இது 1994 மலையாள திரைப்படமான மின்னரத்தின் தமிழ் மறு ஆக்கம் ஆகும்.[4]

இசை

படத்திற்கு தேவா இசையமைத்தார்.[5][6]

மேலதிகத் தகவல்கள் எண்., பாடல் ...

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads