கவுண்டமணி

தமிழக நகைச்சுவை நடிகர் From Wikipedia, the free encyclopedia

கவுண்டமணி
Remove ads

கவுண்டமணி (Goundamani, பிறப்பு: 25 மே 1939) தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகராவார். பெரும்பாலான திரைப்படங்களில் இவர் நகைச்சுவை நடிகர் செந்திலுடன் இணையாக நடித்திருக்கிறார். இந்த இணை, ஹாலிவுட் நகைச்சுவை இணையான லாரல் மற்றும் ஹார்டியுடன் ஒப்பு நோக்கி பாராட்டப்படுவதுண்டு.[1][2][3]

விரைவான உண்மைகள் கவுண்டமணி, பிறப்பு ...
Remove ads

இளமையும் வாழ்க்கையும்

ஆரம்பகால வாழ்க்கை

கவுண்டமணி இந்தியா, தமிழ்நாட்டில், அப்போதைய கோயம்புத்தூர் மாவட்டத்தில் பொள்ளாச்சியிலிருந்து திருமூர்த்தி மலைக்குச் செல்லும் வழியில் இருக்கும் வல்லகுண்டாபுரம் கிராமத்தில்[4] 1939 மே 25 அன்று கருப்பையா-அன்னம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். தற்போது இந்த ஊர் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டத்தில் அமைந்துள்ளது. இவரது ஆரம்பகாலத்தில் மேடை நாடகங்களில் சாதாரணமான பாமர தமிழ்ப் பேசி நடித்ததால். திரையுலகில் கால் பதிக்க வழி செய்தது. நாடகங்களில் அல்லது படங்களில் நடிக்கும்போது, யார் என்ன பேசினாலும் அதற்கு எதிராகப் பேசி (Counter) கவனம் ஈர்ப்பது இவரது வழக்கம். அதனால் அவரை கவுண்டர்மணி (Countermani) என சக நடிகர்கள் அழைத்தனர். பின்னர் 16 வயதினிலே படம் நடிக்கும்போது இவருக்கு அந்தப் பெயரையே தலைப்பில் பயன்படுத்த வைத்தவர் இயக்குநர் கே பாக்யராஜ். அத்திரைப்படத்திலிருந்துதான் இவர் கவுண்டமணி என்ற பெயரில் அழைக்கப்பட்டார். 26ஆம் அகவை முதலே திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

திரை வாழ்க்கை

துவக்கக் காலங்களில் தனியாகவே நகைச்சுவை நடிகராக நடித்தவர், பின்னர் செந்திலுடன் இணைந்து நகைச்சுவைக் காட்சிகளை அமைத்தபின்னர் இருவரும் பெரும் வெற்றி கண்டனர். இரண்டு தலைமுறை இரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார். இவரது பேச்சும், உரையாடல்களும் மக்களிடையே வரவேற்பைப் பெற்றன.

இந்த இணையின் மிகப் புகழ்பெற்ற நகைச்சுவை கரகாட்டக்காரனில் வந்த வாழைப்பழம் வாங்குதல் குறித்ததாகும். சூரியன் திரைப்படத்தில் இவர் கூறிய அரசியலில்லே இதெல்லாம் சகஜமப்பா என்ற சொல்லாடலும் மிகவும் பரவலாக அறியப்பட்டது.

Remove ads

இவர் நடித்திருக்கும் சில திரைப்படங்கள்

இவர் ஏறத்தாழ 450 திரைப்படங்களில் நடித்துள்ளார். அதில் 10 திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வில்லன், குணசித்திர நகைச்சுவை நடிகராகவும் நடித்துள்ளார். இவருடன் நகைச்சுவை நடிகர் செந்தில் இணைந்து நடித்த நகைச்சுவைக் காட்சிகள் இரசிகர்கள் மனதில் என்றும் நீங்கா இடம்பெற்றுள்ளன. இவர் நடித்திருக்கும் சில திரைப்படங்கள் பின்வருமாறு:

மேலும் பார்க்க, கவுண்டமணி நடித்த திரைப்படங்கள்

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads