அழகிகள் (பட்டாம்பூச்சிக்குடும்பம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தகைவிலான் பறவையைப்போன்ற வால்களையுடைய அழகிய, பெரிய வண்ணத்துப்பூச்சிகளை அழகிகள் (Swallowtail) என வகைப்படுத்துவர். இக்குடும்பத்தின்கீழ் 550-உக்கும் மேலான பட்டாம்பூச்சியினங்கள் உள்ளன. பெரும்பாலானவை வெப்பமண்டலப் பகுதிகளில் காணப்பட்டாலும் இவை அண்டார்ட்டிக்கா நீங்கலான அனைத்து கண்டங்களிலும் காணப்படுகின்றன. உலகின் மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சிகளான பறவைச்சிறகிப்பேரினத்துப்பூச்சிகள் இக்குடும்பத்தைச் சேர்ந்தவையே.[1] இவற்றுள் இந்தியாவின் மிகப்பெரிய பட்டாம்பூச்சியான தென் அழகி என்பவையும் அடங்கும்.
Remove ads
புறத்தோற்றம்
இக்குடும்பத்தைச்சேர்ந்த பட்டாம்பூச்சிகள் பெரிதாகவும் பளிச்சென்ற நிறங்களிலும் காணப்படும். ஒரேமாதிரியான உடலமைப்பையும், மெல்லிய நீண்ட கால்களையும், உருண்டையான தலையையும், கறுப்பான கண்களையும் கொண்டிருக்கும். நெஞ்சுப்பகுதியும் பின்னுடற்பகுதியும் நீண்டிருக்கும். உடலில் மெல்லிய கோடுகளையும் காணலாம். முன்னிறகுகள் நீண்டோ, குறுகியோ, அகலமாகவோ இருக்கக்கூடுமெனினும் பின்னிறக்கைகள் அகலமாகவே இருக்கும். பால்வேறுபாடு தோற்றத்தில் தென்படாவிட்டாலும் பெண் பூச்சிகள் பெரிதாக இருக்கும்.
பெரிய அழகிப்பட்டாம்பூச்சியின் வளர்ச்சிநிலைகள்:
- முட்டை
- கம்பளிப்புழு
- கூட்டுப்புழு
- வளர்ந்த பூச்சி
Remove ads
வாழிடங்கள்
இவை இந்தியாவில் மேற்குத்தொடர்ச்சிமலைக் காடுகள், பிற பசுமைக்காடுகள், இலையுதிர்காடுகள், வறண்ட காடுகள், பூங்காக்கள் போன்ற பலதரப்பட்ட இடங்களில் காணப்படுகின்றன.
நடத்தை
ஆண்பூச்சிகள் சில மணிச்சத்துத் தேவைகளுக்காக ஈரமண், விலங்குகளின் சிறுநீர், கண்ணீர், பறவைகளின் எச்சம் போன்றவற்றில் அமர்ந்து உறிஞ்சும். அவ்வமயம் இறக்கைகளைப் படபடவென்று அடித்துக்கொண்டிருக்கும். கறுப்பழகி, பெரிய மயில் அழகி போன்றவை இறக்கையை விரித்து வெயில்காயும். சிவப்புடல் அழகி போன்றவை கூட்டமாக வலசை போகும்.
இவற்றுள் சில இனங்கள் பிற உண்ணத்தகாத பட்டாம்பூச்சிகளையொத்த பேட்ஃசின் போலியொப்புருவாகத் திகழ்கின்றன. ஆனால் புலிவரியழகி (Papilio glaucus) போன்றவற்றில் பெண்பூச்சிகள்மட்டுமே இவ்வகை தோற்றம் பெறுகின்றன.[2]
அழிவாய்ப்பு
இப்பட்டாம்பூச்சிகளின் எழிலான வண்ணத்தோற்றத்துக்காக இவற்றை வேட்டையாடி அழகுப்பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். இவற்றின் வாழிடங்களும் அருகிவருவதால் இவை அழியும் வாய்ப்புள்ளது.
குறிப்புகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads