அவாமி லீக்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அவாமி லீக் (Awami League, வங்காள மொழி: বাংলাদেশ আওয়ামী লীগ, மக்கள் முன்னணி) என்பது வங்காள தேசத்தின் ஒரு சமயச்சார்பற்ற முன்னணி அரசியல் கட்சி. 1971 இல் வங்காளதேசம் உருவாவதற்கு இக்கட்சி பெரிதும் உழைத்தது. 1984 ஆம் ஆண்டில் இருந்து ஷேக் ஹசீனா இக்கட்சியின் தலைவராகப் பணியாற்றுகிறார். இவர் வங்கத் தந்தை என அழைக்கப்படும் ஷேக் முஜிபுர் ரகுமானின் புதல்வி. 1971, டிசம்பர் 16 ஆம் நாளில் வங்காள தேசம் உருவாகிய நாளில் இருந்து அவாமி லீக் இரண்டு தடவைகள் (மொத்தம் எட்டாண்டுகள்) ஆட்சியில் இருந்தது. 2001 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 40.71 விழுக்காடு வாக்குகளை பெற்று மொத்தம் 300 தொகுதிகளில் 62 இல் மட்டுமே கைப்பற்றி வங்காள தேச தேசியக் கட்சியிடம் தோற்றுப் போனது.
டிசம்பர் 29, 2008 இல் இடம்பெற்ற பொதுத் தேர்தல்களில் இக்கட்சி பதிவான 87 விழுக்காடு வாக்குகளில் 48 விழுக்காடு வாக்குகளைப் பெற்று 230 தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நிலையை எட்டியுள்ளது[1]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads