சேக் அசீனா

From Wikipedia, the free encyclopedia

சேக் அசீனா
Remove ads

சேக் அசீனா வாசித் (Sheikh Hasina Wazed[a], பிறப்பு: 28 செப்டம்பர் 1947) என்பவர் வங்காளதேச அரசியல்வாதி ஆவார். இவர் சூன் 1996 முதல் சூலை 2001 வரையும், பின்னர் சனவரி 2009 முதல் ஆகத்து 2024 வரை வங்காளதேசப் பிரதமராகப் பதவியில் இருந்தார்.[3][4] இவர் வங்கத் தந்தை என அழைக்கப்படுபவரும் முதலாவது வங்காளதேச அரசுத்தலைவருமான சேக் முஜிபுர் ரகுமானின் மகள் ஆவார். மொத்தம் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பிரதமராகப் பணியாற்றிய சேக் அசீனா, வங்கதேச வரலாற்றில் அதிக காலம் பதவி வகித்த பிரதமர் ஆவார். 2024 ஆம் ஆண்டில் தொடர்ச்சியான வன்முறை எதிர்ப்புகளைத் தொடர்ந்து பிரதமர் பதவியைத் துறந்து 2024 ஆகத்து 5 இல் நாட்டை விட்டு வெளியேறினார்.

விரைவான உண்மைகள் சேக் அசீனாSheikh Hasina, 10-ஆவது வங்காளதேசப் பிரதமர் ...

உசைன் முகம்மது எர்சாத்தின் சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்ததும், அவாமி லீக்கின் தலைவரான அசீனா, 1991 நாடாளுமன்றத் தேர்தலில் எர்சாத்துக்கு எதிராக தன்னுடன் ஒத்துழைத்த காலிதா சியாவிடம் தோற்றார்.[5][6] எதிர்க்கட்சித் தலைவராக, காலிதா சியாவின் வங்காளதேச தேசியக் கட்சி தேர்தலில் நேர்மையற்ற முறையில் வெற்றி பெற்றதாகக் குற்றம் சாட்டி, அசீனா நாடாளுமன்றத்தைப் புறக்கணித்தார். அதைத் தொடர்ந்து வன்முறை ஆர்ப்பாட்டங்கள் மற்றும் அரசியல் கொந்தளிப்பு ஏற்பட்டது.[7] காலிதா சியா தனது பதவியைத் துறந்து ஒரு தற்காலிக அரசாங்கத்தை அமைத்தார். சூன் 1996 தேர்தலுக்குப் பிறகு அசீனா பிரதமரானார். நாடு பொருளாதார வளர்ச்சி மற்றும் வறுமைக் குறைப்பை அனுபவிக்கத் தொடங்கியபோதிலும், சூலை 2001 இல் முடிவடைந்த அவரது முதல் பதவிக் காலத்தில் நாடு அரசியல் கொந்தளிப்பில் இருந்தது, காலிதா சியா வெற்றி பெற்றார்.

2006-2008 அரசியல் நெருக்கடியின் போது, ​​மிரட்டிப் பணம் பறித்த குற்றச்சாட்டில் அசீனா தடுத்து வைக்கப்பட்டார். சிறையில் இருந்து வெளிவந்த பிறகு, 2008 தேர்தலில் வெற்றி பெற்றார். 2014-இல், வங்காளதேச தேசியக் கட்சியால் புறக்கணிக்கப்பட்ட மற்றும் பன்னாட்டு பார்வையாளர்களால் விமர்சிக்கப்பட்ட தேர்தலில் அவர் மூன்றாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2017-ஆம் ஆண்டில், மியான்மரில் இனப்படுகொலையில் இருந்து தப்பியோடிய கிட்டத்தட்ட ஒரு மில்லியன் ரோகிஞ்சா அகதிகள் நாட்டிற்குள் நுழைந்த போது, அவர்களுக்கு அடைக்கலம் மற்றும் உதவி வழங்கியதற்காக அசீனா பெருமையையும் பாராட்டையும் பெற்றார். 2018, 2024 தேர்தல்களில் மீண்டும் வெற்றி பெற்றார். இத் தேர்தல்களில் வன்முறைகளும் மோசடிகளும் இடம் பெற்றதாகப் பரவலாக விமர்சிக்கப்பட்டது.[8]

இவரது ஆட்சியின் கீழ், வங்காளதேசம் சனநாயகப் பின்னடைவைச் சந்தித்ததாக இப்போது பரவலாகக் கருதப்படுகிறது. மனித உரிமைகள் கண்காணிப்பகம் இவரது அரசாங்கத்தின் கீழ் பரவலான பலவந்தமான காணாமல் போதல்கள், மற்றும் சட்டத்திற்குப் புறம்பான கொலைகளை ஆவணப்படுத்தியது. எண்ணற்ற அரசியல்வாதிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் அவரது கருத்துக்களை எதிர்த்தமைக்காகத் தண்டிக்கப்பட்டனர்.[9][10] 2021 ஆம் ஆண்டில், எல்லைகளற்ற செய்தியாளர்கள் 2014 முதல் வங்காளதேசத்தில் பத்திரிகை சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் அசீனாவின் ஊடகக் கொள்கையின் எதிர்மறையான மதிப்பீட்டை அளித்தனர்.[11] உள்நாட்டில், அசீனா இந்தியாவுடன் மிகவும் நெருக்கமாக இருப்பதாக விமர்சிக்கப்பட்டார்.[12][13] வங்கதேச அரசியலில் இந்தியாவின் தலையீட்டின் வெளிப்பாடாக அவர் காணப்பட்டார்.[14] 2018 ஆம் ஆண்டில் டைமின் உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 பேர்களில் அசீனாவும் இருந்தார்,[15] அத்துடன், 2015,[16] 2018, 2022 ஆம் ஆண்டுகளில் போர்ப்ஸ் இவரை உலகின் சக்திவாய்ந்த 100 பெண்களில் ஒருவராக பட்டியலிட்டது.[17][18][19] அவர் உலகின் மிக நீண்ட காலம் பணியாற்றிய பெண் அரசுத் தலைவராகவும் இருந்தார்.[20]

Remove ads

அடிக்குறிப்புகள்

  1. Bengali: শেখ হাসিনা ওয়াজেদ, romanized: Śēkh Hāsinā Ōẏājēd

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads