அவிணிச்சேரி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அவிணிச்சேரி (Avinissery) என்பது இந்தியாவின் கேரளா மாநிலத்தில் உள்ள திருச்சூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும். மாவட்டத் தலைநகரிலிருந்து ஒரே ஆறு கிலோமீட்டர் தொலைவில் திருச்சூர் மாவட்டத்தின் ஒரு கிராமப் பஞ்சாயத்தாகவும் இந்நகரம் விளங்குகிறது.
Remove ads
புவியியல் அமைப்பு
10.481260° வடக்கு 76.1976000° கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் அவிணிச்சேரி பரவியுள்ளது.
மக்கள் தொகையியல்
இந்திய நாட்டின் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி [1]அவிணிச்சேரி நகரத்தின் மக்கள் தொகை 16,715 ஆகும். மக்கள்தொகையில் 50 சதவீதத்தினர் ஆண்கள் மற்றும் 50 சதவீதத்தினர் பெண்கள் ஆவர். சராசரியாக இந்தநகரத்தின் படிப்பறிவு 83% ஆகும். இச்சதவீதம் இந்தியாவின் தேசிய சராசரி படிப்பறிவு சதவீதமான 59.5% என்பதை விட அதிகமாகும். மக்கள் தொகையில் 12% எண்ணிக்கையினர் 6 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். அருகில் இருக்கும் சேர்ப்பு, பெரிஞ்சேரி, அம்மாடம், வல்லச்சிறா மற்றும் ஒல்லூர் கிராமத்தினர்கள் போன்று இந்நகரத்தவர்களும் பொன் வேலை செய்யும் பொற்கொல்லர்களாக தொழில்புரிகின்றனர். இதனால். தமிழ் நாடு, மேற்கு வங்காளம், மற்றும் வடகிழக்கு இந்தியப் பகுதிகளில் இருந்து மக்கள் இப்பகுதிக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். பிரபல மலையாளக் கவிஞர் முல்லானெழி, இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தலைவர் வி.ஆர். கிருட்டிணன் எழுத்தச்சன் முதலானவர்கள் இக்கிராமத்தைச் சார்ந்தவர்கள் ஆவர்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads