அஸ்வினி வைஷ்னவ்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அசுவினி வைஷ்ணவ் (Ashwini Vaishnaw)(பிறப்பு: சூலை 18, 1970) என்பவர் இந்திய அரசியல்வாதியும் முன்னாள் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியும் ஆவார். இவர் தற்போது 39வது இரயில்வே, 55வது தகவல் தொடர்பு மற்றும் 2வது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ஆவார். இவர் இந்திய அரசாங்கத்தில் 2021 முதல் அமைச்சராகவும், ஒடிசாவை பிரதிநிதித்துவப்படுத்தும் மாநிலங்களவை உறுப்பினராக 2019 முதல் உள்ளார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஆவார். முன்னதாக 1994-ல், ஒடிசா மாநில இந்திய நிர்வாகப் பணியில் சேர்ந்த வைஷ்ணவ், ஒடிசாவில் நீண்ட காலம் பணியாற்றியுள்ளார்.[1]
Remove ads
கல்வியும் பணியும்
இராசத்தான் மாநிலம் பாலி மாவட்டத்தில் உள்ள ஜீவந்த் கல்லன் கிராமத்தில் வசித்தவர் வைஷ்ணவ். பின்னர், இவரது குடும்பம் சோத்பூர் நகருக்கு குடியேறியது.[2][3][4] வைஷ்ணவ் ஜோத்பூரில் உள்ள புனித அந்தோணியார் பள்ளியிலும், ஜோத்பூரில் உள்ள மகேசு பள்ளியிலும் பள்ளிப்படிப்பை முடித்தார். இவர் 1991-ல் ஜோத்பூரில் உள்ள எம்.பி.எம். பொறியியல் கல்லூரியில் மின்னணு தொலைதொடர்பு பொறியியல் படிப்பில் தங்கப் பதக்கத்துடன் பட்டம் பெற்றார். பின்னர் இந்திய தொழில்நுட்பக் கழகம், கான்பூரில் தனது முதுநிலை தொழில்நுட்ப படிப்பினை முடித்தார். 1994-ல் அகில இந்திய தரவரிசையில் 27 உடன் இந்திய ஆட்சிப் பணிக்கு தேர்வு செய்யப்பட்டார்.[5] 2008-ல், வைஷ்ணவ் அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்டன் பள்ளியில் வணிக நிர்வாகவியல் முது நிலைப் படிப்பினை முடித்தார்.[6]
முதுநிலை நிர்வாகவியல் படிப்பிற்கு பின்னர், வைஷ்ணவ் இந்தியா திரும்பினார். ஜி.ஈ. போக்குவரத்து நிர்வாக இயக்குநராக சேர்ந்தார்.[7] இதைத் தொடர்ந்து, இவர் சீமென்சில் துணைத் தலைவராக சேர்ந்தார். லோகோமோட்டிவ்ஸ் & ஹெட் நகர்ப்புற உள்கட்டமைப்பு உத்தி பிரிவில் பணியாற்றினார்.[8] முன்னதாக, இவர் மோர்முகாவ் துறைமுக அறக்கட்டளையின் துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். இதனால் பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் பணி அனுபவம் பெற்றவராவார்.
2012ஆம் ஆண்டில், இவர் பெருநிறுவன துறையை விட்டு வெளியேறி. குசராத்தில் திரீ டீ ஆட்டோ லாஜிஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் வீ ஜீ ஆட்டோ காம்பொனென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய இரண்டு வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி அலகுகளையும் நிறுவினார்.[5]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads