அ. சிவானந்தன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அம்பலவாணர் சிவானந்தன் (Ambalavaner Sivanandan, 20 டிசம்பர் 1923 – 3 சனவரி 2018)[1] இலங்கைத் தமிழ் ஆங்கில எழுத்தாளரும்,[2] சமூக, அரசியல் செயற்பாட்டாளரும் ஆவார். இவர் இலண்டனில் இயங்கும் "இன உணர்வுகளுக்கான கல்வி நிலையம்" (Institute of Race Relations) என்னும் தனியார் கல்வி அறக்கட்டளையின் இயக்குநராகப் பணியாற்றியவர்.[3] இந்த அறக்கட்டளை "இனமும், வகுப்பும்" (Race and Class) என்னும் காலாண்டிதழை வெளியிட்டு வந்தது. இவர் சில புதினங்களையும், சிறுகதைகளையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய முதலாவது புதினம் When Memory Dies 1998 ஆம் ஆண்டின் பொதுநலவாய எழுத்தாளர்களுக்கான பரிசைப் பெற்றது. இலங்கையில் பிறந்த இவர் 1958 இனக்கலவவரத்தை அடுத்து புலம் பெயர்ந்து இலண்டனில் வசித்து வந்தார்.
Remove ads
வாழ்க்கைக் குறிப்பு
யாழ்ப்பாண மாவட்டம், சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகக் கொண்ட அஞ்சல் அலுவலர் அம்பலவாணர் என்பவருக்குப் பிறந்தவர் சிவானந்தன். கொழும்பு புனித யோசப்பு கல்லூரியில் கல்வி கற்றார். இங்கு இவர் தமிழ் மொழியுடன் ஜே. பி. டி சில்வா என்னும் ஆங்கில ஆசிரியரிடம் ஆங்கில இலக்கியமும் கற்றுத் தேர்ந்தார்.[4] பின்னர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து 1945 இல் பொருளியலில் பட்டம் பெற்றார். பட்டப் படிப்பை முடித்து மலையகத்தில் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் இலங்கை வங்கியில் இணைந்து வங்கி முகாமையாளரானார்.[5]
1958 இனக்கலவவரத்தால் பாதிக்கப்பட்டு இலண்டனுக்குப் புலம் பெயர்ந்தார். அங்கு மிடில்செக்சு நகர நூலகங்களில் பணியாற்றினார். இறுதியில் மத்திய லண்டன் "இன உணர்வுகளுக்கான கல்வி நிலையத்தில்" (IRR) பிரதம நூலகராகப் பணியாற்றினார்.[5] இவரது உழைப்பால் நிறுவப்பட்ட இந்நூல் நிலையம் 2006 இல் வாரிக் பல்கலைக்கழக நூலகத்திற்கு இடம் மாற்றப்பட்டது. இது இப்போது "சிவானந்தன் சேகரிப்பு" என அழைக்கப்படுகிறது.[6][7]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads