யாழ்ப்பாண மாவட்டம்
இலங்கையின் வட மாகாணத்தில் அமைந்துள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
யாழ்ப்பாண மாவட்டம் (Jaffna District) இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒன்று. இது நாட்டின் வடகோடியில் அமைந்துள்ளது. மேற்கில் மன்னார் வளைகுடாவும், வடக்கிலும், கிழக்கிலும் இந்தியப் பெருங்கடலும், தெற்கில் யாழ்ப்பாணக் கடல்நீரேரியாலும் சூழப்பட்டுள்ளது. இலங்கையின் தலை போல் அமைந்துள்ள, யாழ்ப்பாணத் தீபகற்பத்தின் பெரும்பகுதியை இந்த மாவட்டம் உள்ளடக்கியுள்ளதுடன், தெற்கேயுள்ள பல தீவுகளும் இதனுள் அடங்கும். இத் தீபகற்பத்தினுள்ளிருக்கும், தொண்டமானாறு, உப்பாறு போன்ற கடல்நீரேரிகளால், இம்மாவட்டம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப் பிரிவுகள், வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி, தீவுப் பகுதி என அழைக்கப்படுகின்றன. இம் மாவட்டத்தின் தெற்கு எல்லையில், யாழ்மாவட்டத்தின் தெற்குப் பகுதியில் இருந்து 1984 பெப்ரவரியில் பிரிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டம் உள்ளது.
Remove ads
காலநிலை
யாழ்ப்பாண மாவட்டம் இலங்கையின் வறண்ட பிரதேசத்தில் அமைந்துள்ளது. வங்காள விரிகுடாவிலிருந்து வரும் வடகீழ்ப் பருவப்பெயர்ச்சிக் காற்றினால் மழையைப் பெறும் இப்பகுதி ஆண்டு தோறும் 1231 மிமீ மழை வீழ்ச்சியைப் பெறுகிறது. ஆகக்கூடிய மாதாந்த சராசரி வெப்பநிலை 29.5 C ஆகவும், குறைந்த வெப்பநிலை 25.2 C ஆகவும் உள்ளது. சராசரி ஈரப்பதன் --- ஆகும்.
தாவரவகை
யாழ்ப்பாண மாவட்டத்துக்குச் செல்லும் எவருக்கும், அம் மாவட்டத்தின் தனித்துவமான தன்மையாகத் தெரியும் முதல் விடயம், மைல் கணக்கில் பரந்து கிடக்கும் பனந்தோப்புக்களாகும்.
மக்கள்
யாழ் மாவட்டம் வரண்டதாகவும், அளவிற் சிறியதாகவும் இருந்தும், இது மிகவும் சனத்தொகைச் செறிவு மிக்கதாகும். ஐந்து மாவட்டங்களையும் 8848.11 ச.கி.மீ. பரப்பளவையும் கொண்ட வடமாகாணத்தில், 1025.2 ச.கி.மீ. அளவுக்குள் அடங்கியுள்ள இம்மாவட்டத்தினுள் 66.6% வீதமான மக்கள் வாழ்ந்ததாக 1981 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்புக் காட்டுகிறது. இங்கே தமிழர், முஸ்லிம்கள், சிங்களவர் எனும் மூவினத்தவரும் வாழ்ந்தாலும், யாழ்மாவட்டத்தின் மக்கள் தொகையில் மிகப்பெரும்பான்மையினர் இலங்கைத் தமிழர் ஆவர். சமய அடிப்படையில், இந்துக்கள் பெரும்பான்மையினராக உள்ளனர். கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் சிறுபான்மையாக உள்ளனர். பௌத்தர்கள் மிகக் குறைவே.
நிர்வாகம்
இலங்கை அரசாங்கத்தின் சார்பில் இம்மாவட்டத்தை நிர்வகிக்கும் அதிகாரி, மாவட்டச் செயலாளர் (முன்னர் அரசாங்க அதிபர்) என அழைக்கப்படுகிறார். இம்மாவட்டம் 15 பிரதேச செயலாளர் பிரிவுகளாக (முன்னர் உதவி அரசாங்க அதிபர் பிரிவுகள்) என அழைக்கப்படும் பல துணைப் பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளது.
பிரதேச செயலாளர் பிரிவுகள்
- யாழ்ப்பாணம்
- நல்லூர்
- சங்கானை
- சண்டிலிப்பாய்
- தெல்லிப்பழை
- உடுவில்
- கோப்பாய்
- கரவெட்டி
- மருதங்கேணி
- பருத்தித்துறை
- சாவகச்சேரி
- ஊர்காவற்றுறை
- வேலணை
- காரைநகர்
- நெடுந்தீவு
ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவும் ஒரு பிரதேச செயலாளரின் கீழ் செயல்படுகின்றது. இந்தத் துணைப் பிரிவுகளும் மேலும் 434 கிராம சேவை அலுவலர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
பிரதேச சபைகள்

இவற்றைவிட மக்களால் தெரிவு செய்யப்படும் உள்ளூராட்சி நிர்வாக அமைப்பில் அடங்கும், மாநகரசபை, நகரசபை, மற்றும் பிரதேச சபைகளாகவும் யாழ்ப்பாண மாவட்டம் பிரிக்கப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டில்
- யாழ்ப்பாண மாநகர சபை
- வல்வெட்டித்துறை நகரசபை
- பருத்தித்துறை நகரசபை
- சாவகச்சேரி நகரசபை
- பருத்தித்துறை பிரதேச சபை
- சாவகச்சேரி பிரதேச சபை
- நல்லூர் பிரதேச சபை
- காரைநகர் பிரதேச சபை
- ஊர்காவற்றுறை பிரதேச சபை
- நெடுந்தீவு பிரதேச சபை
- வேலணை பிரதேச சபை
- வலிகாமம் மேற்கு பிரதேச சபை
- வலிகாமம் வடக்கு பிரதேச சபை
- வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை
- வலிகாமம் தெற்கு பிரதேச சபை
- வலிகாமம் கிழக்கு பிரதேச சபை
- வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை
Remove ads
பாதுகாப்பு
ஏ-9 கண்டி-யாழ் நெடுஞ்சாலை 2006, ஆகத்து 11 முதல் மூடப்பட்டு 2009 ஆம் ஆண்டில் நான்காம் ஈழப்போர் முடிவுக்கு வந்ததை அடுத்து மீளத் திறக்கப்பட்டது.
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads