அ. விநாயகமூர்த்தி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அப்பாத்துரை விநாயகமூர்த்தி (Appathurai Vinayagamoorthy, 19 திசம்பர் 1933 - 28 மே 2017)[1] இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், வழக்கறிஞரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.[2] இவர் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவராக இருந்தவர்.
Remove ads
அரசியல் வாழ்க்கை
விநாயகமூர்த்தி அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினராக இருந்தவர். இக்கட்சியின் தலைவர் குமார் பொன்னம்பலம் 2000 ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து அக்கட்சியின் தலைவரானார். 2000 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இவர் அக்கட்சியின் சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்டார்.[3] 2001 ஆம் ஆண்டில் குமார் பொன்னம்பலத்தின் மகன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அரசியலில் இறங்கியதும், அக்கட்சியின் தலைமைப்பொறுப்பில் இருந்து விலகினார்.
2001 இல் தமிழ்க் காங்கிரசு, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியன இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தோற்றுவித்தனர். 2001 தேர்தலில் ததேகூ சார்பில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு மீண்டும் தெரிவானார்.[4] 2004 தேர்தலில் வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டார். ததேகூ வேட்பாளர்களில் இவர் ஆறாவதாக வந்ததை அடுத்து நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகவில்லை.[5]
2010 ஆம் ஆண்டில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகினார். அத்தோடு தமிழ்க் காங்கிரசும் விலகியது. ஆனாலும், விநாயகமூர்த்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலேயே தொடர்ந்து இருக்கலானார். 2010 தேர்தலில் ததேகூ சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு மீண்டும் நடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார்.[6]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads