ஆங்கிலச் சட்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இங்கிலாந்து மற்றும் வேல்சில் நடைமுறையிலுள்ள சட்டம் ஆங்கிலச் சட்டம் (English law) எனப்படுகிறது.[1] அயர்லாந்து குடியரசிலும் பெரும்பான்மையான பொதுநலவாய நாடுகளிலும் ஐக்கிய அமெரிக்காவிலும் நடைமுறையிலுள்ள பொதுச் சட்டம், இதையே அடிப்படையாகக் கொண்டது[2]. பொதுநலவாய நாடுகள் பிரித்தானிய பேரரசின் கீழ் இருந்தபோது ஆங்கிலச் சட்டம் கடைபிடிக்கப்பட்டு வந்தது.

ஆங்கிலச் சட்டத்தின் சாரமானது நீதிமன்றங்களில் அமர்ந்து நீதிபதிகள் தங்களுக்கு முன் வைக்கப்படும் தகவல்களை சட்ட முன்னுதாரணம் (stare decisis) கொண்டு உருவாக்குவதாகும். இங்கிலாந்து மற்றும் வேல்சின் மிக உயரிய மேல்முறையீட்டு நீதிமன்றமான ஐக்கிய இராச்சியத்தின் உச்ச நீமன்றத்தின் முடிவுகள் மற்ற அனைத்து நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்தும். எடுத்துக்காட்டாக, எந்தவொரு நாடாளுமன்ற சட்டம் இயற்றப்படாவிடினும் கொலை என்பது ஒரு பொதுச் சட்டக் குற்றமாகும். பொதுச் சட்டத்தை நாடாளுமன்றம் திருத்தவோ மீட்கவோ இயலும்; இதன்படியே கொலைக்குற்றத்திற்கான தண்டனை மரண தண்டனையிலிருந்து ஆயுள் தண்டனையாக (இங்கிலாந்தில்) மாற்றப்படுள்ளது. இரு சட்ட முறைகளுக்கும் முரண் எழும்போது ஆங்கில நீதிமன்றங்களில் இயற்றுசட்டமே பொதுச் சட்டத்தை விட முன்னுரிமை பெறுகிறது.[3]
Remove ads
வரலாறு
தொன்மையான ஆங்கிலச் சட்டம் கி.பி 600இல் கென்ட் மன்னர் அத்தெல்பெர்ட்டினால் எழுதப்பட்டது. இது ஆங்கிலத்தில் மட்டுமல்லாது டியூட்டோனிக்க மொழிகள் அனைத்திலுமே பழமையான சட்டம் ஆகும். அறச் சிந்தனைகளின்அடிப்படையிலேயே இச்சட்டம் இயற்றப்பட்டிருக்க வேண்டும். இவை தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வந்தபோதும் அடுத்த இரு நூற்றாண்டுகளுக்கு பெரும் முன்னேற்றம் ஏற்படவில்லை. கிபி 890இல் கனூட் அரசர் அதுவரை நடைமுறையிருந்த சட்டங்களைத் தொகுத்தார். இருப்பினும் இவை கையெழுத்துப் பிரதிகளாகவே இருந்தமையால் வெளி உலகிற்கு தெரியாமலே இருந்தது. 1568ஆம் ஆண்டு இவற்றை இலம்பார்டு பதிப்பித்தார். தற்கால ஆங்கிலத்தில் இவை 1840இல் மொழிமாற்றப்பட்டு வெளியானது.
Remove ads
சான்றுகோள்கள்
இதனையும் காண்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads