அயர்லாந்து குடியரசு
ஐரோப்பிய நாடு From Wikipedia, the free encyclopedia
Remove ads
அயர்லாந்துக் குடியரசு அல்லது அயர்லாந்து (Ireland, ஐரிசு: Éire) என்பது வட-மேற்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு குடியரசு நாடாகும். இது அயர்லாந்து தீவின் ஆறில் ஐந்து பங்கை தன்னகத்தே கொண்டுள்ளது. அயர்லாந்து தீவு 1921-இல் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. அதன் படி அயர்லாந்து நாட்டின் வடக்கே வட அயர்லாந்தும் (ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பகுதி), மேற்கே அட்லாண்டிக் பெருங்கடல், மற்றும் கிழக்கே ஐரியக் கடல் ஆகியன உள்ளன. இதுவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளில் ஒன்று ஆகும். அயர்லாந்து குடியரசு ஐரோப்பிய ஒன்றியத்தில் 1973-ஆம் ஆண்டு சனவரி மாதம் முதலாம் திகதி உறுப்பினராக இணைந்து கொண்டது.டப்ளின் நகரமே அயர்லாந்துக் குடியரசின் மிகப்பெரிய நகரமும் தலைநகரமும் ஆகும். அயர்லாந்துக் குடியரசின் மிகப் பெரிய இரண்டாவது நகரம் கோர்க் (Cork) ஆகும். அயர்லாந்துக் குடியரசின் சனத்தொகை அண்ணளவாக 4.6 மில்லியன் ஆகும். அயர்லாந்துக் குடியரசில் பொதுவாக ஆங்கில மொழியே பேசப்படுகிறது, எனினும் அயர்லாந்துக் குடியரசின் சில பகுதிகளில் ஐரிய மொழியே முதல் மொழியாகப் பேசப்பட்டு வருவதோடு மட்டுமன்றி அனைத்துப் பாடசாலைகளிலும் ஐரிய மொழியே கற்பிக்கப்பட்டும் வருகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித வளர்ச்சி குறியீட்டில் 2011 ஆம் ஆண்டிலும் 2013-ஆம் ஆண்டிலும் உலகில் அதிகம் வளர்சியடைந்த அல்லது அபிவிருத்தி அடைந்த நாடுகளில் ஏழாவது இடைத்தை அடைந்தது. அயர்லாந்துக் குடியரசு பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் ஸ்தாபக உறுப்பின நாடுகளில் ஒன்றாகும். இங்கு ஐக்கிய இராச்சியத்தின் குடிமகனான எவரும் கடவுச்சீட்டு இல்லாமல் சென்று வரலாம்.
Remove ads
சமயம்
Remove ads
நிர்வாகப் பிரிவுகள்
|
Remove ads
புவியியல்
அயர்லாந்தின் பரப்பளவு 70,273 km2 அல்லது 27,133 சதுர மைல்களாக அமைந்துள்ளது. இதன் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் அத்திலாந்திக் சமுத்திரம் அமைந்துள்ளது. வடகிழக்குத் திசையில் வடக்குக் கால்வாய் அமைந்துள்ளது. கிழக்குத் திசையில் ஐரியக் கடல் அமைந்துள்ளது.
வெளிநாட்டு உறவு
அயர்லாந்து குடியரசின் வெளிநாட்டு உறவுகள் கணிசமாக செல்வாக்குச் செலுத்துவது ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாக இருப்பதும் ஐக்கிய இராச்சிய நாடுகளுடன் இருதரப்பு உறவுகளை வைத்திருப்பதுவுமாகும்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads