ஆங்கில நெடுங்கணக்கு

From Wikipedia, the free encyclopedia

Remove ads

புதிய ஆங்கில நெடுங்கணக்கு (English Alphabet) என்பது 26 எழுத்துக்களையும் இரண்டு கூட்டெழுத்துக்களையும் (Æ மற்றும் Œ) கொண்ட இலத்தீன் நெடுங்கணக்கு ஆகும்.[1]

பேரெழுத்துக்கள்
ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ
சிறிய எழுத்துக்கள்
abcdefghijklmnopqrstuvwxyz

[2]

ஆங்கில எழுத்துக்களின் வடிவம் தட்டச்சு முறைக்கேற்பச் சிறிதளவில் மாறுவதுண்டு. மேலும் அச்சிட்ட எழுத்துக்கும் கையெழுத்துக்கும் வித்தியாசங்கள் இருப்பதுண்டு.

Remove ads

வரலாறு

பண்டைய ஆங்கிலம்

ஆங்கில மொழியானது முதன்முதலில் ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து ஆங்கிலோ-சாக்சன் நெடுங்கணக்கு முறையில் எழுதப்பட்டது. பின்னர், இங்கிலாந்தில் இந்நெடுங்கணக்கு முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

ஏறத்தாழ ஏழாம் நூற்றாண்டளவில் கிறித்தவச் சமயப் பரப்புக் குழுவினரால் அறிமுகப்படுத்தப்பட்ட இலத்தீன் வரி வடிவம் ஆங்கிலோ-சாக்சன் முறைக்குப் பதிலீடாக அமையத் தொடங்கியது. சிறிது காலத்திற்கு இரு முறைகளும் வழக்கில் இருந்தன.

1011ஆம் ஆண்டில் ப்யர்ஹ்ட்பிர்த் என்ற எழுத்தாளர் பண்டைய ஆங்கில நெடுங்கணக்கை ஒழுங்குபடுத்தினார்.[3] இவர் இலத்தீன் நெடுங்கணக்கு முறையின் 24 எழுத்துக்களை (உம்மைக் குறியையும் சேர்த்து) முதலில் பட்டியலிட்டார். பின்னர், ஐந்து மேலதிக ஆங்கில எழுத்துக்களைப் பட்டியலிட்டார்.

A B C D E F G H I K L M N O P Q R S T V X Y Z & ⁊ Ƿ Þ Ð Æ

புதிய ஆங்கிலம்

Thumb
நகர்பேசியில் ஆங்கில நெடுங்கணக்கு

எழுத்துக்களான Uஉம் Jஉம் 16ஆம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டன. அத்தோடு, W ஒரு தனி எழுத்து என்ற நிலையை அடைந்தது. ஆகவே, தற்போது ஆங்கில நெடுங்கணக்கானது பின்வரும் 26 எழுத்துக்களைக் கொண்டுள்ளது.

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

கூட்டெழுத்துக்களான Æஉம் Œஉம் இன்றும் கிரேக்க அல்லது இலத்தீன் மூலங்களைக் கொண்ட சொற்களை எழுதும்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எடுத்துக்காட்டாக, encyclopædia, cœlom முதலிய சொற்களைக் குறிப்பிடலாம். கவனயீனத்தாலும் தொழினுட்ப வரையறைகளாலும் (குவர்ட்டி விசைப்பலகையில் கூட்டெழுத்துக்கள் உள்ளடக்கப்படாமை) மேலே குறிப்பிடப்பட்ட கூட்டெழுத்துக்கள் AE என்றோ OE என்றோ காட்டப்படுவதுண்டு. மேற்கூறிய கூட்டெழுத்துக்கள் அமெரிக்க ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுவதில்லை. அவை இரண்டுக்கும் பதிலாக E பயன்படுத்தப்படுவதுண்டு (எடுத்துக்காட்டாக, encyclopædiaஇற்காக encyclopedia மற்றும் fœtusஇற்காக fetus).[4]

Remove ads

உம்மைக் குறி

உம்மைக் குறியானது ஆங்கில நெடுங்கணக்கின் இறுதியில் சில சமயங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ப்யர்ஹ்ட்பிர்த்தின் எழுத்துக்களின் பட்டியிலில் உம்மைக் குறி உள்ளடக்கப்பட்டுள்ளது.

தனி மேற்கோள் குறி

தனி மேற்கோள் குறியானது ஆங்கில நெடுங்கணக்கின் பகுதியாகக் கருதப்படாவிடினும் ஆங்கிலச் சொற்களைச் சுருக்கிக் கூறப் பயன்படுத்தப்படுகின்றது.[5]

எழுத்துக்களின் பெயர்கள்

ஆங்கில எழுத்துக்களின் பெயர்கள் அரிதாகவே பலுக்கப்படுகின்றன. ஆனாலும் tee-shirt, deejay, emcee, okay, aitchless, wye-level போன்ற சொற்களில் ஆங்கில எழுத்துக்களின் பெயர்கள் பலுக்கப்படுகின்றன. அத்தோடு, பெரும்பாலான அஃகுப்பெயர்களின் பலுக்கலிலும் (எ. கா.: HTML, USB) எழுத்துக்களின் பெயர்கள் பலுக்கப்படுகின்றன.

மேலதிகத் தகவல்கள் எழுத்து, எழுத்துப் பெயர் ...
Remove ads

ஒலியியல்

ஆங்கில மொழியில் A, E, I, O, U ஆகிய எழுத்துக்கள் உயிரெழுத்துக்களாகக் கருதப்படும்.[6] ஏனைய எழுத்துக்கள் மெய்யெழுத்துக்களாகும். ஆனாலும் Y என்ற எழுத்து உயிரெழுத்தாகவோ மெய்யெழுத்தாகவோ இருக்கும் (எ. கா.: myth).[7] மிகவும் அரிதாக W என்ற எழுத்தும் அவ்வாறு இருக்கும் (எ. கா.: cwm).[8] மேலும் U என்ற எழுத்துச் சில சந்தர்ப்பங்களில் மெய்யெழுத்தாகவோ உயிரெழுத்தாகவோ இருக்கும் (எ. கா.: university). மிகவும் அரிதாக O என்ற எழுத்தும் அவ்வாறு இருக்கும் (எ. கா.: one).

Remove ads

எழுத்துக்கள் பயன்படுத்தப்படும் வீதம்

ஆங்கில மொழியில் அதிகம் பயன்படுத்தப்படும் எழுத்து E ஆகும். குறைவாகப் பயன்படுத்தப்படும் எழுத்து Z ஆகும்.

கீழேயுள்ள வரிசைப் பட்டியல் ஆங்கில மொழியில் எழுத்துக்கள் பயன்படுத்தப்படும் வீதத்தைக் காட்டுகின்றது.

மேலதிகத் தகவல்கள் எழுத்து, பயன்படுத்தப்படும் வீதம் ...
Remove ads

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads