இலத்தீன்
இத்தாலிக்குக் குடும்பத்தைச் சேர்ந்த இந்தோ-ஐரோப்பிய மொழி From Wikipedia, the free encyclopedia
Remove ads
இலத்தீன் (Latin) என்பது இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த தொல்புகழ் பெற்ற மொழி ஆகும். இன்று இது பெரும்பாலும் வழக்கற்ற மொழியாக இருக்கிறது. ஆனால் கத்தோலிக்க மதத்தின் குருவாகிய போப்பாண்டவர் வாழும் வாட்டிகன் நகரத்தின் ஆட்சி மொழிகளுள் இதுவும் ஒன்று ஆகும். இது முதலில் இத்தாலி தீபகற்பத்தில் உள்ள உரோம் நகரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பேசப்பட்டது.[2]
உரோமானியப் பேரரசின் காலத்தில், ஆட்சி மொழியாகவும், கிறித்துவ மத வழிபாடுகளில், முக்கிய மொழியாகவும், மேற்குலக நாடுகளில், கற்றோர்களின் மொழியாகவும் திகழ்ந்தது. இத்தாலியில் சுமார் கி.மு 900 ஆண்டுகளில், இடைபர் ஆற்றங்கரைப் பகுதியாகிய இலத்தீனம் என்னும் பகுதியில் குடியேறிய வடக்கு ஐரோப்பியர்கள் அங்கிருந்த இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சாராத எற்றசுக்கன் (Etruscan) மொழி பேசுவோருடனும், இந்தோ ஐரோப்பிய மொழியாகிய கெலிடிக்குமொழி பேசுவோருடனும், தெற்கே வாழ்ந்த கிரேக்க மொழி பேசுவோருடனும் கலந்து இலத்தீன் நாகரிகம் தோன்றியது.
சுமார் கி.மு. 100 முதல் கி.பி. 100 வரையிலான காலப்பகுதிகளில் இலத்தீன் மொழியானது வளம் பெற்ற செம்மொழியாக உருவெடுத்தது. இலத்தீன் மொழியில் நெடுங்கணக்கு அகரவரிசையானது எற்றசுக்கன் மொழி மற்றும் கிரேக்க மொழிகளில் இருந்து பெறப்பட்டதாகும். எற்றசுக்கன் மொழியில் இருந்த 26 எழுத்துகளில் 21 எழுத்துக்களைப் பெற்றுப் பின்னர் கிரேக்க நாட்டை வென்ற பிறகு சுமார் கி.மு 100இல் Y, Z ஆகிய இரண்டு எழுத்துக்களையும் சேர்த்து மொத்தம் 23 எழுத்துக்களாக உருக்கொண்டது. இன்று ஆங்கிலம், செருமன், பிரெஞ்சு ஆகிய மேற்கு ஐரோப்பிய மொழிகள் இலத்தீன் எழுத்துக்களைத்தான் பயன்படுத்துகின்றன.
இன்று, பல மாணவர்கள், அறிஞர்கள் கத்தோலிக்க குருமார்கள் மற்றும் உறுப்பினர்கள் பேசும் இலத்தீன் ஒரு சரளமான மொழியாகும். அது ஆரம்ப, இடைநிலை, உயர்நிலை, மேல்நிலை, பட்டப் படிப்புநிலை, ஆய்வுநிலை, என அனைத்து வகைக் கல்வி நிறுவனங்கள் மூலம் உலகம் முழுவதும் பரவி உள்ளது.[3][4]
Remove ads
பழைய இலத்தீன்
இலத்தீன் மொழி முதலில் அறியப்பட்ட வடிவம் பழைய இலத்தீன் ஆகும். இது உரோமப் பேரரசு முதல் மத்திய உரோமைக் குடியரசு காலம் வரை வாழ்ந்த மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது. தொல்லியல் துறையினரால் கண்டெடுக்கப்பட்ட இரண்டு கல்வெட்டுகள் மூலமும், சில முந்தைய கால நடைமுறை இலத்தீன் இலக்கிய படைப்புகள் மற்றும் பிளாடசும் (Plautus) தேரனசும் (Terence) எழுதிய நகைச்சுவைத் தொகுப்புகள் மூலமும் இதன் தொன்மைத் தன்மை உறுதிப்படுத்தப்படுகின்றது. இலத்தீன் எழுத்துக்கள் எற்றுசுகன் எழுத்துக்களிலிருந்து உருவானவை. இது பூத்திரொஃபெடான் (boustrophedon)[5] எனப்படும் வலதுபுறத்தில் இருந்து இடதுபுறம் நோக்கி[6] எழுதும் முறையில் எழுதப்பட்டு வந்தது. பின்னர், இடதுபுறத்தில் இருந்து வலதுபுறம் நோக்கிச் செல்லும் முறையில் மாற்றப்பட்டது.[7]
Remove ads
பாரம்பரிய இலத்தீன்
குடியரசின் பிற்பகுதியிலும், பேரரசின் ஆரம்பகாலங்களிலும், ஒரு புதிய பாரம்பரிய இலத்தீன் மொழி உருவானது. சிறந்த பேச்சாளர்களின் பேருரைகள், உரைஞர்களின் உரைநடைகள், இலக்கியவாதிகளின் பெரும் இலக்கியப் படைப்புகள், கவிஞர்களின் கவிதைகள், வரலாற்றாசிரியர்களின் வரலாற்று ஆய்வறிக்கைகள், எழுத்தாளர்களின் எழுத்தோவியங்கள், படைப்பாற்றல் மிக்கோரின் நனவு உருவாக்கங்கள் போன்றவை சொல்லாட்சிக் கல்லூரிகளில் கற்றல் பொருளாகப் பயன்படுத்தப்பட்டன. இவை கற்போரிடையே இலக்கண அறிவை வளர்த்தன. கற்போரின் உணர்வைக் கிளர்ந்தெழச் செய்தன. இவை முறைசாரா மொழிக் கல்வி அல்லது பயிற்சி நிறுவனங்களாகவும், புணர்கூட்டு கல்விச்சாலைகளாகவும் செயல்பட்டு வந்தன. இவை கல்வி கற்ற பேராசிரியர்களால் ஈகை உணர்வுடன் தொடர்ச்சியாக நன்கு பராமரிக்கப்பட்டன. இத்தகைய நிறுவனங்கள் தற்கால இலக்கண வழிமுறைக் கற்றல் பிரிவுகளுக்கு வேர்களாக அமைந்தன.[8][9]
Remove ads
தற்போதைய மொழிகளில் இலத்தீனின் செல்வாக்கு
ஆங்கில மொழியில் பொதுவான பல்லசைச் சொற்களில் பல, இலத்தீன் மொழியிலிருந்து, பழைய பிரெஞ்சு மொழியின் ஊடாக ஆங்கிலத்திற்குச் சென்றவை. புராதன கற்பனைக் கதைகள், வீரகாவியங்கள், காதல் கற்பனைத் தொகுப்புகள் போன்றவற்றில் காணப்படும் சொற்குவியலில் 59% ஆங்கில வார்த்தைகளும்[10] 20% செருமானிய வார்த்தைகளும்[11] மேலும் 14% இடச்சு வார்த்தைகளும் இடம் பெற்றுள்ளன.[12] இவை அனைத்தும் இலத்தீன் மொழியில் இருந்து தோன்றியவை. கலவை அல்லாத மற்றும் பெறப்படாத வார்த்தைகள் சேர்க்கப்படுமானால் இந்த புள்ளிவிவரங்கள் வியத்தகு அளவில் மேலும் உயரும்.
இலத்தீன் மொழியை ஒப்பிட்டு பிற மொழிகளில் புராதனக் கற்பனைக் கதைகள், வீரகாவியங்கள், காதல் கற்பனைத் தொகுப்புகள் போன்றவற்றில் காணப்படும் சொற் குவியல்களில், ஒலியியல், சொல் வடிவ மாற்றங்கள், குரல் ஏற்ற இறக்கங்கள், சொற்பொழிவுகள், உரையாடல்கள், சொற்களின் மூலம் எண்ணங்களைப் பரிமாறல், தொடரியல் நிரல்தொடரிகள், வழிமுறைத் தொடரமைப்புகள், சொற்றொடரியல்கள், சொற்தொகுதிகள், ஒலிவேறுபாடுகள், ஒலியழுத்தங்கள் போன்ற கூறுகளின் அடிப்படையில் ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது, இந்த ஆய்வின் முடிவுகள்:
- சார்தினிய (Sardinian) மொழி 8%
- இத்தாலிய (Italian) மொழி 12%,
- எசுப்பானிய (Spanish) மொழி 20%
- உரோமானிய (Romanian) மொழி 23.5%
- ஆச்சிடன் (Occitan) மொழி 25%
- போர்த்துகீசிய (Portuguese) மொழி 31%
- பிரஞ்சு (French) மொழி 44%
இந்த ஆய்வு இலத்தீன் மொழியை ஒப்பிட்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு. எனவே, பிற மொழிகள் இலத்தீனிலிருந்து எந்த அளவிற்கு வேறுபட்டுள்ளது என்பதை அறிய முடியும். இம்முடிவுகளில், சதவிகித அளவு அதிகமாக இருப்பின் அது இலத்தீனிலிருந்து அதிக அளவு பயன்பாட்டு விலக்கம் கொண்டுள்ளது என்று பொருள்.[13]
இலத்தீன் நெடுங்கணக்கு
A | B | C | D | E | F | Z |
H | I | K | L | M | N | O |
P | Q | R | S | T | V | X |
இலத்தீன் மெய்யெழுத்துகள்
பாரம்பரிய இலத்தீன் மெய்யெழுத்துகள் பின்வரும் அட்டவணையில் காட்டப்பட்டுள்ளன:[14]
Remove ads
உள்ளீடற்ற சொற்றொடர்கள்

இலத்தீன்மொழியில், அசையழுத்தம் மிக்க உச்சரிப்புகளை எங்கு அதிக அளவு வலியுறுத்தப்பட வேண்டுமோ, அந்த இடங்கள் உள்ளீடற்ற சொற்றொடர்களால் குறிக்கப்படுகின்றன.[15] இலத்தீன் மொழியில், பெரும்பாலான வார்த்தைகளில் இறுதி அசைக்கு முந்தைய அசை ஒலியழுத்தம் கொடுத்து அழுத்திக் கூறக்கூடிய அசையாக இருக்கும். இந்த அசை இலத்தீன் மொழியில், பெனெல்லுடீமா (இறுதியிலிருந்து இரண்டாவது - paenultima) அல்லது சில்லபா பெனெல்லுடீமா (இறுதியிலிருந்து இரண்டாவது அசை - syllaba paenultima)] என்று அழைக்கப்படும்.[16] இம்மொழியில் ஒரு சில வார்த்தைகளில் இறுதி அசையிலிருந்து மூன்றாவது அசையானது அழுத்தக் குறியுடன் உறுத்திக் கூற வேண்டி இருக்கும். இந்த அசை இலத்தீன் மொழியில், ஆன்டிபெனெல்லுடீமா (இறுதியிலிருந்து மூன்றாவது - antepaenultima) அல்லது சில்லபா ஆன்டிபெனெல்லுடீமா (இறுதியிலிருந்து மூன்றாவது அசை - syllaba antepaenultima)] என்று அழைக்கப்படும்.
- சால்வே (sálve) ஒரு நபருக்கு /
- சால்வெடெ (salvéte) ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுக்கு
- வணக்கம்
- ஏவ் (áve) ஒரு நபருக்கு /
- ஏவெடெ (avéte) ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுக்கு
- வாழ்த்துக்கள்
- வேல் (vále) ஒரு நபருக்கு /
- வாலெடெ (valéte) ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுக்கு
- சென்றுவருகிறேன்
- கியூரா உட்டு வேலியாசு (cúra ut váleas)
- கவனமாக இரு / எச்சரிக்கையாக இரு
- எக்குசோட்டாடசு (exoptátus) ஆண் மகனுக்கு /
- எக்குசோட்டாடா (exoptáta) பெண் மகளுக்கு,
- ஓட்டாடசு (optátus) ஆண் மகனுக்கு /
- ஓட்டாடா (optáta) பெண் மகளுக்கு,
- கிராடசு (grátus) ஆண் மகனுக்கு /
- கிராடா (gráta) பெண் மகளுக்கு,
- அச்செட்டசு (accéptus) ஆண் மகனுக்கு /
- அச்செட்டா (accépta) பெண் மகளுக்கு
- நல்வரவு
- குவொமொடொ வேலசு (quómodo váles?),
- உட்டு வேலசு (ut váles?)
- எப்படி இருக்கிறீர்கள்?
- பெனெ (béne)
- நல்லது / நன்று
- அமபோ இடெ (amabo te)
- தயவு செய்து
- பெனெ வேலியோ (béne váleo)
- நான் நலமாக இருக்கிறேன்
- மேலெ (mále)
- தீய / கெட்ட / பழுதுள்ள
- மேலெ வேலியோ (mále váleo)
- நான் நன்றாக இல்லை
- குவேசோ (quáeso) (['kwajso]/['kwe:so])
- மகிழ்வி / விருப்பம் போல்
- இடா (íta),
- இடா எசுட்டு (íta est),
- இடா வேரோ (íta véro),
- சிக்கு (sic),
- சிக்கு எசுட்டு (sic est),
- ஏடியம் (étiam)
- ஆம் / ஆமாம் / சரி
- நான் (non),
- மினிமெ (minime)
- இல்லை / கிடையாது
- கிராடியாசு இடிபி (grátias tíbi),
- கிராடியாசு இடிபி ஆகோ (grátias tíbi ágo)
- தங்களுக்கு நன்றி
- மாகுனாசு கிராடியாசு (mágnas grátias),
- மாகுனாசு கிராடியாசு ஆகோ (mágnas grátias ágo)
- தங்களுக்கு மிகவும் நன்றி
- மாசிமாசு கிராடியாசு (máximas grátias),
- மாசிமாசு கிராடியாசு ஆகோ (máximas grátias ágo),
- இன்செண்டசு கிராடியாசு ஆகோ (ingéntes grátias ágo)
- தங்களுக்கு மிக்க நன்றி
- அசிபெ சிசு (accípe sis) ஒரு நபருக்கு /
- அசிபிடெ சிடிசு (accípite sítis) ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுக்கு,
- இலிபேண்டர் (libénter)
- நீங்கள் வரவேற்கப்படுகிறீர்கள்
- குவா எயிடாடெ எசு? (qua aetáte es?)
- உங்கள் வயது என்ன?
- 25 ஆன்னோசு நாடசு (25 ánnos nátus) ஆண் மகனுக்கு /
- 25 ஆன்னோசு நாடா (25 ánnos náta) பெண் மகளுக்கு
- 25 வயது ஆகிறது
- உலோகுயரிசினெ (loquerísne ...)
- நீங்கள் பேசுவீர்களா ...
- இலத்தீன் ? (Latíne?)
- இலத்தீன்?
- கிரீசு (Gráece?) (['grajke]/['gre:ke])
- கிரேக்கம்?
- ஆங்குலிசு? (Ánglice?) (['aŋlike])
- ஆங்கிலம்?
- இடாலியானெ? (Italiáne?)
- இத்தாலிய மொழி?
- கால்லீசு? (Gallice?)
- பிரெஞ்சு மொழி?
- இசுப்பானீசு? (Hispánice?)
- எசுப்பானிய மொழி?
- உலூசிடானீசு? (Lusitánice?)
- போர்த்துகீசிய மொழி?
- தியோடிசீ? (Theodísce?) ([teo'diske])
- செருமன் நாட்டு மொழி?
- சினீசு? (Sínice?)
- சீன நாட்டு மொழி?
- சப்போனீசு? (Japónice?) ([ja'po:nike])
- சப்பானிய மொழி?
- கொரீயனெ? (Coreane?)
- கொரிய மொழி?
- அராபீசு? (Arábice?)
- அரபி மொழி?
- பெருசீசு? (Pérsice?)
- பெருசிய மொழி?
- இண்டீசு? (Indice?)
- இந்தி?
- உருசீசு? (Rússice?)
- உருசியநாட்டு மொழி ?
- காம்பிரிக்கா? (Cambrica?)
- இங்கிலாந்தின் வெல்சு பகுதி மொழி?
- ஊபி இலாட்டிரினா எசுட்டு? (úbi latrína est?)
- கழிப்பறை எங்கே உள்ளது?
- ஆமோ இடெ (ámo te) / இடெ ஆமோ (te ámo)
- நான் உன்னை காதலிக்கிறேன்
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads