ஆசியாநெட் திரைப்பட விருதுகள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆசியாநெட் திரைப்பட விருதுகள் என்பது ஆசியாநெட் தொலைக்காட்சி நிறுவனத்தால் ஆண்டுதோறும் வழங்கப்படும் திரைப்படங்களுக்கான விருதுகள் ஆகும். ஆசியாநெட் தென்னிந்திய மாநிலமான கேரளாவில் மலையாள மொழி தொலைக்காட்சி ஆகும் (டாக்டர் ராஜி மேனனால் நிறுவப்பட்டது). மலையாள மொழி திரைப்படத் துறையில் கலை மற்றும் தொழில்நுட்ப சிறப்பை கவுரவிக்கும் வகையில் விருது வழங்கும் விழா ஏற்பாடு செய்யப்படுகிறது என்று ஆசியாநெட் கூறுகிறது.
இந்த விருது வழங்கும் விழாவை ஜான்சன் அண்ட் ஜான்சன் 1998 ஆம் ஆண்டில் இணைந்து வழங்கியது. [2] பின்னர் லக்ஸ் அடுத்த 5 ஆண்டுகளில் பங்களிப்பை ஏற்றுக்கொண்டது. பிறகு 2004 இல் ஜிவா சோப். [3] அதற்கு பல ஆண்டுகளாக உஜாலா ஏற்றது.[4] [5] முதல் நடந்த நிகழ்ச்சிகளை நிரபரா ஏற்றது. [6] 2018 நிகழ்ச்சியை பீமா ஜுவல்லர்ஸ் வழங்கியது.[7][8]
விழாக்கள் பொதுவாக கேரளாவின் கொச்சி, அங்கமாலி மற்றும் திருவனந்தபுரம் நகரங்களில் நடைபெறும். துபாயிலும் இரண்டு முறை நடைபெற்றது. 21 வது ஆசியநெட் திரைப்பட விருதுகள் விழா சமீபத்தில் 2019 ஏப்ரல் 6 மற்றும் 7 தேதிகளில் கொச்சியில் நடைபெற்றது.[9]
Remove ads
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads