ஆடிக் கார்த்திகை

தமிழர் சமய விழா From Wikipedia, the free encyclopedia

ஆடிக் கார்த்திகை
Remove ads

ஆடிக் கார்த்திகை என்பது ஆடித் திங்கள் கார்த்திகை நாளில் கொண்டாடப்படும் இந்து சமய விழாவாகும். இவ்விழா நாளில் முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.[1] இது தென்னிந்தியா, இலங்கை மற்றும் புலம்பெயர்ந்தோர் இடையில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.[2]

விரைவான உண்மைகள் ஆடிக் கார்த்திகை, கடைப்பிடிப்போர் ...
Remove ads

முன்னுரை

பொதுவாக தென்னிந்திய பாரம்பரியத்தின் படி கார்த்திகை நாளே முருகன் வழிபாட்டிற்கு உகந்த நாள் ஆகும். அதிலும் தெய்வ வழிபாடுகள் செய்ய உகந்த ஆடித் திங்களில் வரும் கார்த்திகை நாள் மிகவும் சிறப்பிற்குரியது. ஆடிக் கார்த்திகையில் ஆறுமுகனை வழிபடத் தேடிவரும் நன்மை என்பது தமிழ் ஆன்றோர் வாக்கு ஆகும். ஆடிக் கார்த்திகை நன்னாளில் ஆறுமுகனை வணங்கினால், கர்ம வினைகள் நீங்கும்; செவ்வாய் தோஷம் அகலும்; திருமணத் தடைகள் நீங்கும். சொந்த வீடு, வாகன வசதி, தொழில் அபிவிருத்தி போன்றவை ஸித்திக்கும் என்கின்றனர் அடியார்கள்.[3]

Remove ads

தொன்மம்

முருகன் பிறந்தது விசாக நாண்மீன் என்று சொல்லப் பட்டாலும், அவனைப் பாலூட்டி வளர்த்தது ஆறு கார்த்திகைப் பெண்கள் “கார்த்திகை” நாண்மீன்களாக மாறி அன்றைய நாளை ஆடிக் கார்த்திகையாக நோன்பிருந்து வழிபடுகிறார்கள்.[4] முருகனுக்கு திதிகளில் சஷ்டியும், கிழமைகளில் வெள்ளிக்கிழமையும், நாண்மீன்களில் கார்த்திகையும் சிறப்பு. ஆடித் திங்களிலிருந்து தொடங்கி ஆறுதிங்கள்கள் கார்த்திகை நோன்பு இருந்து தைத் திங்கள் கார்த்திகையில் நோன்பை முடிக்கலாம்.[5]

Remove ads

நோன்புமுறைகள்

நோன்பு இருப்பவர்கள் கடைப்பிடிக்கவேண்டிய பொதுவான நோன்புமுறைகளே இதற்கும் பொருந்தும் என்றாலும் முருகனிற்குரிய நோன்புகளில் உப்பு தவிர்க்கப் படுவதை முக்கியமாய்க் கருதுகின்றனர். உப்பில்லா உணவை எடுத்துக் கொண்டு கார்த்திகை நோன்போ, சஷ்டி நோன்போ இருத்தல் சிறப்பாகவும், உயர்வாகவும் கருதப் படுகிறது.[6]

சிறப்பு

மழைக்காலத் தொடக்கமான தென்செலவு பொதுவாக அனைத்து இறை வழிபாடுகளிற்கும் ஏற்றதாகவும், வடசெலவு திருமணம், உபநயனம், புதுமனை புகுதல் போன்ற முக்கிய நிகழ்வுகளிற்கு ஏற்றதாகவும் சொல்லப் படுகிறது. ஆடித் திங்களில் இருந்து வரிசையாக அனைத்துக் கடவுளரையும் வேண்டிச் செய்யும் விழாக்களும், நோன்புகளும் வருகின்றன. தேவர்களின் மாலைக்காலம் என்று சொல்லப் படும் இத்திங்களில் வழிபாடுகள் அதனாலேயே நடத்தப் படுகிறது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads