கார்த்திகை நோன்பு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கார்த்திகை நோன்பு இந்து சமய மக்களினால் கடைப்பிடிக்கப்படும் முருகனுக்கான நோன்புகளுள் ஒன்றாகும். திங்கள்தோறும் கார்த்திகை நாளில் இந்நோன்பு கடைப்பிடிக்கப்படும். முந்தைய நாள் நண்பகல் உணவு எடுத்துக் கொண்டு, அன்றிரவில் நோன்பு இருந்து முருகன் வழிபாட்டை செய்வார்கள்.[1] கார்த்திகை அன்று குளித்து நோன்பு இருந்து, கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம், கந்த புராணம், கந்தர் கலிவெண்பா, முருக மந்திரங்கள் போன்றவற்றைப் பாராயணம் செய்வார்கள்.[2] ஆண்டுதோறும் கார்த்திகைத் திங்களில் வரும் திருக்கார்த்திகை, ஆடியில் வரும் ஆடிக் கார்த்திகை, தையில் வரும் தைக் கார்த்திகை ஆகிய மூன்று கார்த்திகை நாட்களும் சிறப்பு வாய்ந்த நாட்களாகக் கருதுப்படுகிறது.[3]
Remove ads
தொன்மம்
சரவணப் பொய்கையிலிருந்து முருகனை எடுத்து வளர்த்த கார்த்திகைப் பெண்கள் நினைவாக கார்த்திகை நாளன்று இந்நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நாளில் குமரனை வழிபடுவோர்கள் செல்வம், கல்வி, ஆயுள், உத்த பத்தினி, நன் மக்கட்பேறு முதலிய நலன்களை அடைவர்கள் என்று நம்பப்படுகிறது.[4]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads