ஆண்டிமடம்

தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஆண்டிமடம் (Andimadam) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஆண்டிமடம் வட்டம் & ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் கிராம ஊராட்சி ஆகும். இது 16.09.2016-இலிருந்து ஒரு வட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் சுண்ணாம்புக்கல் அதிகமாக காணப்படுவதால் சிமெண்ட் நகரம் என அழைக்கப்படுகிறது. ஆண்டிமடம் முந்தைய திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

விரைவான உண்மைகள் ஆண்டிமடம்Andimadam, நாடு ...
Remove ads

மக்கள்தொகை

2001-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை 6633 ஆண்கள் 3315 பெண்கள் 3318.[1]இது அரியலூரிலிருந்து 50 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. வடகிழக்கில் 242 கி.மீ. தொலைவில் சென்னை அமைந்துள்ளது. தென்மேற்கில் 111 கி.மீ. தொலைவில் திருச்சியும், தென்கிழக்கில் 23 கி.மீ. தொலைவில் கங்கைகொண்டசோழபுரமும் அமைந்துள்ளது.

பார்க்க வேண்டியவை

Thumb
அகத்தீசுவரர் ஆலயம்

பழமை வாய்ந்த சிவன் கோவில் நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது[2].(மேல அகத்தீச்வரர் ஆலயம் விளந்தை ஆண்டிமடம் [தொடர்பிழந்த இணைப்பு]). இக்கோவிலின் சிவலிங்கம் அகத்தியரால் உருவாக்கப்பட்டது. இக்கோவிலைச்சுற்றி ஐந்து சிவலிங்கங்கள் அமைந்துள்ளது. மேலும் இங்கு புகழ் பெற்ற புனித மார்த்தினார் ஆலயம் அமைந்துள்ளது.

Thumb
அகத்தீசுவரர் கோயில் உட்புறம்
Thumb
விளந்தை முருகர் கோவில்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads