ஆதிக் ரவிச்சந்திரன்

தமிழ்த் திரைப்பட இயக்குநர் From Wikipedia, the free encyclopedia

ஆதிக் ரவிச்சந்திரன்
Remove ads

ஆதிக் ரவிச்சந்திரன் (Adhik Ravichandran) ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநரும், திரைக்கதை எழுத்தாளரும், நடிகரும் ஆவார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் பணியாற்றி வருகிறார்.[1] திரிஷா இல்லனா நயன்தாரா திரைப்படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானார்.[2] இவரது இயக்கத்தில் வெளியான, மார்க் ஆண்டனி, குட் பேட் அக்லி திரைப்படங்கள் வணிக ரீதியில் வெற்றி பெற்றது.[3][4]

விரைவான உண்மைகள் ஆதிக் ரவிச்சந்திரன், பிறப்பு ...
Remove ads

ஆரம்பகால வாழ்க்கை

ஆதிக், 1991 செப்டம்பர் 17 இல் பிறந்தார்.[5] இவருடைய தந்தை இரவிச்சந்திரன் "இரவி" கந்தசாமி ஏறத்தாழ இரண்டு தலைமுறைகளாக உதவி இயக்குநராகப் பணியாற்றிய பின்னரும் இயக்குநராக அறிமுகமாகவில்லை. தனது மகனின் திரைப்படங்களில் சிறப்பு வேடங்களில் நடித்தார்.[6] ஆதிக் திரைத்துறையில் ஆர்வமாக இருந்தபோதிலும், திரைப்படத் துறையில் அவரது தந்தையின் போராட்டங்கள் காரணமாக, ஆதிக்கின் தாயார் திரைத்துறை வாய்ப்புகளை ஒரு முழுநேரத் தொழிலாகத் தொடரத் தடை விதித்தார். ஆதிக் கல்லூரியில் காட்சித் தகவல் தொடர்பு படிக்க விரும்பினார். ஆனால், அதற்குப் பதிலாக தனது தாயின் விருப்பப்படி பொறியியல் படித்தார். இருப்பினும், முதற் காலாண்டு முதல் இறுதிக் காலாண்டு வரை திரைக்கதைகளை எழுதத் தொடங்கினார்.

Remove ads

தொழில் வாழ்க்கை

ஆதிக் இரவிச்சந்திரன் கல்லூரிப் படிப்பிற்குப் பிறகு, மேஜர் ரவியின் உதவி இயக்குநராகப் பயிற்சி பெற்றார். 2015-இல் திரிஷா இல்லனா நயன்தாரா என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது . இருப்பினும், இவரது அடுத்த திரைப்படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் (2017) வசூல் ரீதியாகத் தோல்வியடைந்தது. அதன் முன்னணி நடிகர் சிலம்பரசன் தயாரிப்பின் போது தலையிட்டு சிக்கல்களை ஏற்படுத்துவதாக ஆதிக் குற்றஞ்சாட்டினார்.[7] பின்னர் டபாங் 3 (2019) என்ற இந்தித் திரைப்படத்தின் தமிழ்ப் பதிப்பிற்கு வசனங்களை எழுதினார்.[8] ஆதிக் இயக்கிய மூன்றாவது திரைப்படம் பஹிரா வெற்றி பெறவில்லை, ஆனால் அதே ஆண்டின் பிற்பகுதியில் வெளியான மார்க் ஆண்டனி இவரது வாழ்க்கையை மாற்றியது.[9] ஆதிக் இரவிச்சந்திரன் மார்க் ஆண்டனி திரைப்படத்திற்குப் பிறகு, அஜித்குமாரைக் கதாநாயகனாக வைத்து குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தை இயக்க ஒப்பந்தம் செய்தார்.[10]

Remove ads

குடும்பம்

ஆதிக் இரவிச்சந்திரன் திசம்பர் 2023-இல், நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவை மணந்தார்.[11]

திரைப்படவியல்

திரைப்பட இயக்குநராக

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, திரைப்படம் ...

எழுத்தாளராக

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, திரைப்படம் ...

நடிகராக

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, திரைப்படம் ...

பின்னணிப் பாடகராக

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, பாடல் ...
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads