உதவி இயக்குநர் (திரைப்படம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
உதவி இயக்குநர் (Assistant director) என்பவர் ஒரு திரைப்பட இயக்குநருக்கு கீழ் பணிபுரிபவர் ஆவார். இவரின் பங்கு படப்பிடிப்பு தயாரிப்பு அட்டவணையை கண்காணித்தல், தளவாடங்களை ஏற்பாடு செய்தல், நடிகர்கள் மற்றும் குழுவினரின் தினசரி அழைப்பு தாள் (தினசரி கால்ஷீட்) சரிபார்ப்பது போன்றவை ஆகும். அத்துடன் அவர் குழுவினரின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பையும் கவனித்துக் கொள்ள வேண்டும்.[1] வரலாற்று ரீதியாக அகிரா குரோசாவா மற்றும் ஆல்பிரட் ஹிட்ச்காக் போன்ற பிரபல இயக்குநர்கள் ஆரம்பகாலத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர்கள் ஆவார்கள்.
தமிழ்த் திரைப்படத்துறையில் 90 விழுக்காடு இயக்குநர்கள் ஆரம்பலகாலத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எடுத்துக்காட்டாக: அட்லீ என்ற இயக்குநர் ஆரம்ப காலத்தில் பிரபல இயக்குநர் ஷங்கர் என்பவரிடம் நண்பன் மற்றும் எந்திரன் ஆகிய இரு படங்களில் உதவி இயக்குநராக உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போன்று இயக்குநர் பாலா என்பவர் பாலு மகேந்திரா[2] என்ற இயக்குனரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளார்.[3]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads