ஆதிதிருவரங்கம் ரங்கநாதசுவாமி கோயில்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆதிதிருவரங்கம் ரங்கநாத சுவாமி கோயில் அல்லது பழைய ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமாள் கோயில் இந்தியா, தமிழ்நாடு, சங்கராபுரம் வட்டத்தில் உள்ள கோவில் ஆகும். இது திருக்கோவிலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் ஆகிய பெரும் நகரங்களுக்கு அருகில் உள்ள ஒரு வைணவ திருத்தலமாகும். இத்திருத்தலத்தின் வரலாறானது தற்காலத்தில் திருச்சியில் அமைய பெற்றுள்ள ஸ்ரீரங்கம் இரங்கநாத பெருமாள் அமைவதற்கு முன்பே இத்தலத்தில் அரங்கநாதர் இங்கு பள்ளி கொண்ட நிலையில் அமைந்ததாகவும் அதன் பிறகு தான் ஸ்ரீரங்கம் கோயிலில் அதே அரங்கநாதர் பிரதிஷ்டை உருவானதாகவும் கூறப்படுகின்றது. மேலும் இக்கோயிலானது தமிழர்கள் கட்டிடக்கலை கொண்டு இடைக்கால சோழர்களால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது, பின்னர் விஜயநகர அரசர்கள் காலத்தில் விரிவாக்கப்பட்டுள்ளது. இக்கோயில் வளாகம் 5 ஏக்கர்கள் (20,000 m2) பரப்பளவில் உள்ளது. மேலும் இங்கு ஒரு வரலாற்றுக் கால தானிய சேமிப்புக் களஞ்சியம் உள்ளது.
இந்த ரங்கநாத பெருமாள் மகாபலிச் சக்ரவர்த்தி மற்றும் ஆழ்வார்களுக்கு முற்பட்டவராக நம்பப்படுகிறது. தினசரி ஆறுகால பூஜைகள் மற்றும் ஆண்டுக்கு சுமார் 12 திருவிழாக்கள் நடைபெறுகிறது. சித்திரை மாதத்தில் மிக முக்கியமான தேர் திருவிழா கொண்டாடப்படுகிறது. கோவில் காலை 6 மணி முதல் இரவு 7:30 மணி வரை திறந்திருக்கும். இக்கோவில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையால் பராமரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது.
Remove ads
விளக்கம்
இந்து புராணப்படி, சோமுகன் என்ற அரக்கன் தேவர்களிடம் இருந்து வேதங்களைத் திருடிச் சென்றுவிட்டார். இதனால் கவலைப்பட்ட முனிவர்கள் விஷ்ணுவிடம் முறையிட்டனர். இதையடுத்து விஷ்ணு இந்த இடத்தில் ரங்கநாதராக நீரில் இருந்து தோன்றி வேதத்தை மீட்டார். மேலும் அவர் பிரம்மாவுக்கு இந்த இடத்தில் அருளியதாகவும் நம்பப்படுகிறது. வேறு ஒரு கதைப்படி இந்த இடத்தில் சூரகீர்த்தி என்ற குழந்தையில்லாத ஒரு மன்னன் குழந்தை வரம்வேண்டி விஷ்ணுவை வேண்டி குழந்தைப் பேறு பெற்றார். இந்த இடத்தில் விஷ்ணுவை வேண்டி சாபவிமோசனம் பெற புஷ்கரணி என்ற குளமானது சந்திரனால் நிறுவப்பட்டது.
Remove ads
கட்டிடக்கலை
இக்கோயிலின் ராஜகோபுரமானது உயரம் குறைந்த மொட்டை கோபுரமாக உள்ளது. மேலும் கோயிலானது உயரமான கருங்கல் சுவர்களால் சூழப்பட்டுள்ளது. இக்கோவில் 2 ஏக்கர்கள் (8,100 m2) பரப்பளவில், இரண்டு திருச்சுற்றுகளுடன் உள்ளது. கருவறையில் உள்ள ரங்கநாதபெருமாள் உருவமானது சயன கோலத்தில் 29 அடி (8.8 m) சுதையில் உருவானவரே என்றாலும், தைலக்காப்பு எல்லாம் இல்லாமல் அழகாக இருக்கிறார். இவர் நீட்டிப் படுக்க இருபத்து நான்கு அடி நீளம் உள்ள படுக்கை வேண்டியிருக்கிறது. அத்தனை பெரிய வடிவத்தார். தலைப்பகுதியில் ஆதிசேஷன் தன் ஐந்து தலைகளுடன் குடையாக உள்ளது. சீதேவியின் மடியில் தலை சாய்த்துப் பூதேவி அடி வருடப் பள்ளிக்கொள்கிறார். மேலும் தலைப்பகுதியில் கருடன் வணங்கிய கோலத்தில் உள்ளார். [1]வலக்கையைத் தலைக் கணைத்து, இடக்கையை உயர்த்தி, பிரம்மாவுக்கு உப தேசிக்கின்ற நிலையில் உள்ளார். கருவறை முன்பு ஆழவார் மண்டபம் உள்ளது. தாயார் ரங்கநாயகிக்கு தனியாக ஒரு கருவறை அமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் தென் கிழக்கு மூலையில் செங்கல்லால் கட்டப்பட்ட வரலாற்றுகால தானிய சேமிப்புக் களஞ்சியம் உள்ளது. இந்தக் களஞ்சியமானது திருரங்கம், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில் மற்றும் பாபநாசம் பாலைவனநாதர் கோவில்களில் உள்ளது போல உள்ளது. இது கோயிலுக்கு விவசாயிகள் அளிக்கும் தானியங்களைச் சேமித்து வைக்க கட்டப்பட்டிருக்கிறது.[2] கருவறையைச் சுற்றி கோதண்டராமன், அனுமான் மற்றும் கிருஷ்ணர் கோவில்கள் உள்ளன.
Remove ads
திருவிழாக்கள்
இக்கோயிலில் வைணவர்கள் கொண்டாடக்கூடிய வைகுண்ட ஏகாதசி, கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, ராமநவமி மற்றும் ஆடிப் பூரம் ஆகிய நாட்களில் விழாக்கள் நடைபெறுகின்றன. பல ஆண்டுகளாக முதன்மையான கோவில் திருவிழாவான, பிரம்மோத்சவம் என்னும் தேர்த்திருவிழா, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலில் தொன்றுதொட்டு செங்குந்த முதலியார் மரபினர் சீர்பாதம் சேவை செய்து வருகின்றனர்.[3]
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads